இடுகைகள்

கல்யாணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாத்தாவின் சொத்தை மீட்க நினைக்கும் பேத்தி, அவளுக்கு உதவும் காதலன்! - கல்யாணி - தேவன்

படம்
  கல்யாணி - தேவன் கல்யாணி தேவன் அல்லயன்ஸ் 220 தேவன் எழுதிய ஹாஸ்யரசமிக்க நாவல் இது. சென்னை முதல் கும்பகோணம் வரை வந்து பிறகு மீண்டும் சென்னைக்கு சென்று நிறைவு பெறுகிறது. இப்படி சொன்னால் ஏதோ ரயில் பயணத்தைப் பற்றிய சொல்லுவது போல உங்களுக்குத் தோன்றும். உண்மை அப்படித்தான் என்றாலும் கதையில் நெருக்கமான உணர்ச்சிகள் மிக குறைவு.  கல்யாணி சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது அவளுக்கு அவளுடைய தாத்தாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதாவது அவளது தாத்தா இறந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. எனவே, நீ உடனே கிளம்பி வா என்று. கல்யாணிக்கு பயங்கரமான அதிர்ச்சி. சமீப நாட்களில் அவளை தாத்தா வீட்டுக்கு அழைக்கவில்லை. ஏனென்ற காரணம் தெரியாமல் தவித்து வருகிறாள். திடீரென இறப்புச் செய்தி வர தடுமாறிப் போகிறாள். இவளது ஆப்த தோழி உமாவிடம் என்னவென்று பார்க்கப் போகிறேன் என்று சொல்லி கிளம்புகிறாள்.  ரயில் கிளம்பும்போது அவளுக்கு கிடைக்கும் டிக்கெட்டை சுந்தரம் என்பவன் எடுத்து தருகிறான். இத்தனைக்கும் அவனும் கும்பகோணம் போகவேண்டியிருக்கிறது. கிடைத்த கடைசி டிக்கெட்டையும் அவனது நண்பன் நீலுவின் தங்கை உமாவுக்காக, அவளின் தோழி கல்யாணிக்கு

ஹலோ சொல்லலாமா? அகிலின் இளமைத் தாண்டவம்

படம்
ஹலோ (தெலுங்கு, 2017) இயக்கம்: விக்ரம் கே குமார் கேமரா: பி.எஸ்.வினோத் படத்தொகுப்பு:  பிரவின் புடி அனுப் ரூபென்ஸ் சின்ன வயதில் உருவான காதல், இளம் பருவத்தில் ஒன்றாக சேர்வதுதான் படம் சொல்லும் கதை. தெருவில் வாழும் சிறுவன் சீனு, தெருவில் இந்திப் பாடல்களை வாசித்துக் காட்டி பானிபூரி சாப்பிட்டு வருகிறான். அதாவது படத்தில் அப்படித்தான் காட்டுகிறார்கள். அங்கே அதே கடையில் பானிபூரி சாப்பிட சிறுமி ஜூன்னு(மைரா தண்டேகர்) வருகிறாள். அவளுக்கும் சீனுவுக்கும் இடையில் ஒருவித இணக்கம் வருகிறது. இசையை வாசித்துக் காட்டும்போது, ஜூன்னு அவனை இடைமறித்து நீயே ட்யூன் ஒன்றை உருவாக்கு.அதுதானே டேலண்ட் என்று சொல்லிவிட்டு பானிபூரியை சாப்பிட்டு போய்விடுகிறாள். நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நாமும் பரஸ்பரம் அக்கறை காட்டுவோம் அல்லவா? அதேதான் இங்கும் நிகழ்கிறது. அப்போது சீனு, ஜூன்னு இருவரும் பிரியும்போது என்ன நிகழ்கிறது, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதை. விக்ரம் குமாரின் மேக்கிங், படம் பார்க்கும் அனுபவத்தை மிக இனிமையாக்குகிறது. அதுவும் வினோத்தின் ஒளிப்பது படத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ர