இடுகைகள்

உலகம்- தான்சானியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிளாக்குகளை ஒடுக்கும் தான்சானியா அரசு!

படம்
வலைத்தளங்களுக்கு ஒடுக்குமுறைவரி ! தான்சானியா அரசு விரைவில் சமூக வலைதளம் மற்றும் தனிநபர் வலைத்தளங்களுக்கு வரி விதிக்கவிருக்கிறது . ஜூன் 15 தேதி முதல் வலைத்தள நிறுவனர்கள் ஆண்டுக்கு 900 டாலர்களை கட்டினால் இணையத்தில் உயிர்வாழ முடியும் . இதில் யூட்யூப் சேனல்கள் , பிளாக்குகள் , சமூகவலைதளங்களும் உள்ளடங்கும் . விதியை மீறுபவர்களுக்கு 5 மில்லியன் அபராதமும் , ஒராண்டு தண்டனையும் உண்டு . சுதந்திர ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் தொலைத்தொடர்பு ஆணையம் (TCRA) இச்சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டது . தற்போது இத்தடையை எதிர்த்து இணையத்தில் கடுமையான விமர்சனங்களை தான்சானியர்கள் எழுதி வருகின்றனர் . " மூன்றில் ஒருபகுதியினர் வறுமையில் தவிக்கும் நாட்டில் லைசென்ஸ் வாங்கி இணையத்தில் எழுதுவது எப்படி சாத்தியம் ? அரசு தனக்கு எதிரான ஊடகங்களை டிஜிட்டல் அகதிகளாக மாற்றியுள்ளது " என்கிறது ஜாமி ஃபாரம் என்ற செய்தி வலைதள நிறுவனர் மெக்சன்ஸ் மெலோ . 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜான் பி மகுஃபுலி எதிர்க்கட்சி மற்றும் தனக்கு எதிரான சக்த