இடுகைகள்

இடதுசாரி வீரர்கள் 1 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1. சச்சிதானந்த விஷ்ணு கடே(1896-1970)

படம்
இந்தியாவில் குழந்தையாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை முதல் பொது செயலாளராக இருந்து நடத்தியவர் கடே (1896-1970). இவர் பொதுச்செயலாளராக இருந்தபோது கட்சி தடைசெய்யப்பட்ட நிலையில் இயங்கி வந்தது. மங்களூரில் ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த கடே, பாம்பேயிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் படித்தார். பங்கிம் சந்திர சட்டர்ஜியின் நூல்களின் மீது பெரும்பித்து கொண்ட வாசகர். லோகமன்ய திலகரின் கேசரி(1881) தினசரியை படித்தவர் நாளடைவில்  காந்தியின் வெள்ளையனே வெளியேறு, அகிம்சை ஆகியவற்றின் மீது விலகல் மனப்பான்மையே வளர்த்து வந்தார். அதேசமயம் விலகல் மனப்பான்மை அவரின் கருத்தியல் மீதேயொழிய அவர் மீது அல்ல; எளிய மக்களை கவரும் அவரின் பேச்சை விரும்பியவர், அதே தன்மையிலான அரசியலை ஏற்கவில்லை. கடேவின் வாசிப்பு பரந்து பட்டது. பெர்னார்ட் ஷா, ஹெச்.ஜி.வெல்ஸ், தல்ஸ்தாய், பிலிப் ஸ்பராட், பி.எஃப் பிராட்லி, மாக்சிம் கார்க்கி ஆகியோரின் எழுத்துக்களை ஏராளமாக படித்தார். 1929 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக செயல்பட்டு வந்தார். அப்போது அவருடன் டாங்கே, எஸ்.எஸ். மிராஜ்கர், கே.என்.ஜோக்லெகர், ஆர்.எஸ