1. சச்சிதானந்த விஷ்ணு கடே(1896-1970)



















இந்தியாவில் குழந்தையாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை முதல் பொது செயலாளராக இருந்து நடத்தியவர் கடே (1896-1970). இவர் பொதுச்செயலாளராக இருந்தபோது கட்சி தடைசெய்யப்பட்ட நிலையில் இயங்கி வந்தது.



Communist Wallpapers - Wallpaper Cave


மங்களூரில் ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த கடே, பாம்பேயிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் படித்தார். பங்கிம் சந்திர சட்டர்ஜியின் நூல்களின் மீது பெரும்பித்து கொண்ட வாசகர். லோகமன்ய திலகரின் கேசரி(1881) தினசரியை படித்தவர் நாளடைவில்  காந்தியின் வெள்ளையனே வெளியேறு, அகிம்சை ஆகியவற்றின் மீது விலகல் மனப்பான்மையே வளர்த்து வந்தார். அதேசமயம் விலகல் மனப்பான்மை அவரின் கருத்தியல் மீதேயொழிய அவர் மீது அல்ல; எளிய மக்களை கவரும் அவரின் பேச்சை விரும்பியவர், அதே தன்மையிலான அரசியலை ஏற்கவில்லை.

கடேவின் வாசிப்பு பரந்து பட்டது. பெர்னார்ட் ஷா, ஹெச்.ஜி.வெல்ஸ், தல்ஸ்தாய், பிலிப் ஸ்பராட், பி.எஃப் பிராட்லி, மாக்சிம் கார்க்கி ஆகியோரின் எழுத்துக்களை ஏராளமாக படித்தார். 1929 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக செயல்பட்டு வந்தார். அப்போது அவருடன் டாங்கே, எஸ்.எஸ். மிராஜ்கர், கே.என்.ஜோக்லெகர், ஆர்.எஸ. நிம்ப்கர் ஆகியோர் இவருடன் கட்சியில் இணைந்திருந்தனர்.

ரஷ்ய புரட்சி, ஜாலியன் வாலாபாக், ஹங்கேரியில் அமைந்த பெலா குன் அரசு, ஜெர்மனியில் கொல்லப்பட்ட ரோசா லக்சம்பர்க், கார்ல் லீநெக்ட்ச் ஆகிய சம்பவங்களின் விளைவாக தொழிற்சங்கத்தை தொடங்கினர். இதற்கு சிபிஐ என பெயரிட்டவர் சங்கர் வித்தியார்த்தி மற்றும் சத்யா பக்தா.

இரண்டாம் உலகப்போருக்கு பின் சென்னை ஜனசக்தி பத்திரிகையுடன் இடம்பெயர்ந்த கடே, நேரு உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி எழுதினார்.  இந்துஸ்தான்  பாகிஸ்தான் இரண்டும் பாரத தாயின் பிள்ளைகள். அவர்களை தேசியம் என்று கூறி பிரிப்பது அவசியமற்றது என்று எண்ணினார் கடே. இவரது சகோதரர் ஜன சங்கத்தின் உறுப்பினர் என்பதால் இவரின் பேச்சுகளிலும் ஆன்மிக பாதிப்பு கடைசி வரை தொடர்ந்தது.


  - தமிழில்: ச.அன்பரசு
நன்றி: பவுன்டைன் இங்க்