கதைகளிலுள்ள ஐடியாக்களை படமாக்குவேன்!
முத்தாரம் Mini - கிரிஷ் காசர்வல்லி
உங்களின் அனைத்து திரைப்படங்களும்
இலக்கியங்களை தழுவியவை ஏன்?
கதைகளை படித்து சில ஐடியாக்களை
எடுத்துக்கொண்டு திரைப்படமாக்குவது எனது பாணி. ஒருமுறை படித்த கதையை நினைவுகூர்ந்து
திரைக்கதை எழுதி எழுத்தாளரிடம் காட்டுவேன்.
உங்கள் படங்களில் உறுதியான பெண்களை
பார்க்க முடிகிறதே எப்படி?
நான் உருவாக்கி பதினான்கு படங்களில்
எட்டு படங்கள் பெண்களைப் பற்றியது. பெர்க்மன் பெண்களின் பிரச்னைகளை பற்றி படம் எடுத்தார்.
அவரிடம் பெண்களைப் பற்றியே ஏன் படம் எடுக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்டனர். ஆனால் குரோசவா
அதுபோல படங்களை உருவாக்கவில்லை ஆனால் அவரிடம் நீங்கள் பெண்களை வைத்து ஏன் படங்களை செய்யவில்லை
என்ற கேள்வியை கேட்பதில்லை(சிரிக்கிறார்)
கர்நாடகத்தின் தனித்துவம் என்ன?
இந்தியாவிலேயே ஏழு மொழிப்படங்களும்
ஓடும் ஒரே இடம் இது. மேலும் கன்னடப்படங்களை விட தமிழ், தெலுங்கு படங்களுக்கு சிறந்த
சந்தை.
14 தேசிய விருதுகளைப் பெற்றது
படங்களை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரித்துள்ளதா?
தயாரிப்புச்செலவு கூடியுள்ள நிலையில்
தற்போது கலைப்படங்களை தயாரிக்க கர்நாடகாவில் வாய்ப்பு குறைவு.
-கிரிஷ் காசர்வல்லி, கன்னட இயக்குநர்
நன்றி: பவுன்டைன் இங்க்