மேற்குலகில் ஆண்மைக்குறைவு!





Image result for low sperm

அதிகரிக்கும் மலட்டுத்தன்மை!

மேற்குலக நாடுகளில் ஆண்களின் விந்தணுக்களின் அளவு 60 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தண்டி மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரும் OB-GYN மருத்துவமனை மருத்துவருமான சாரா மார்டின்ஸ் டா சில்வா.  1981-2013 காலகட்டத்தில் நியூயார்க்கின் ஐகான்(Icahn) மருத்துவக்கல்லூரி  செய்த மருத்துவ ஆராய்ச்சிகளில் ஆண்களிடம் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் உண்மை தெரிய வந்துள்ளது.

16.7 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பு கொண்ட கருவுறுதல் சந்தை. உலகில் சராசரியாக ஏழில் ஒருவருக்கு மட்டுமே கருவுறுதல் இயற்கை முறையில் நடைபெறாமல் போகிறது. இதில் பாதிப்புக்கு ஆண்களே 50 சதவிகிதம் காரணம். ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மைக்கு ஆராய்ச்சியாளர்கள் வேதிப்பொருட்களின் பயன்பாடு, சூழலை பொதுவாக கைகாட்டினாலும் உறுதியாக காரணம் என்னவென்று இன்னும் கண்டறியப்படவில்லை. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த சாராவுக்கு அறிவியலில் கொள்ளை ஆர்வம். பொறியாளர் அப்பா மூலம் மருத்துவத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது. “ஆண்களின் மலட்டுத்தன்மை பற்றி பெண் ஒருவர் ஆய்வு செய்வது புதிது.” என்று புன்னகைப்பவர் கரு முட்டையை விந்தணு எளிதில் அடைவதற்காக இரு மருந்துகளை தயாரித்து சோதித்துவருகிறது சாராவின் குழு.