லுக் விடுவது எதற்கு?
ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி
சாலையில் நம்மை கடந்துசெல்பவர்களின்
கண்களை பார்ப்பது ஏன்?
பொதுவாக ஒருவரின் கண்களைப் பார்ப்பது
அவரிடம் செய்திகளை பரிமாறுவதற்குத்தான். பைக்கில், பஸ்சில் செல்லும்போதும் எதிரில்
வருபவர்களின் முகத்தை நாம் தன்னியல்பாக பார்ப்பதும் இதற்காகவே. ஒருவரின் முகத்தை பார்த்து
புன்னகைப்பது அவரிடம் பேசுவதற்கு சமூகரீதியில் இணக்கமான சூழலை உருவாக்கும். இதனை ஜெர்மனில்
‘wie Luft behandeln’ சூ எனலாம். காற்றைப் போல பார்ப்பது என்பது இதன் அர்த்தம்.