தேங்காய் எண்ணெய் நல்லதா கெட்டதா?
தேங்காய் எண்ணெய்: அமுதா?விஷமா?
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக
பேராசிரியை கரென் மிச்செல்ஸ், தேங்காய் எண்ணெய்யை விஷம் என்று கூறி பேசிய வீடியோ மருத்துவ
வட்டாரங்களை உலுக்கி வருகிறது.
தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்பு,
மருத்துவர்களை இப்படி பேச வைத்திருக்கலாம். மேற்குலகில் இரண்டாம் உலகப்போர் காலம்வரை
தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்பட்டு வந்து பின்னர் மிச்செல்ஸ் போன்றோரின் பயமுறுத்தல்
அறிக்கைகளுக்கு பின்னரே பயன்பாடு குறைந்துபோனது. தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் தேங்காய்
எண்ணெய் இழந்த செல்வாக்கை மீட்டு வளர்ச்சியடைவதாக Whole Foods நிறுவனம் கூறியுள்ளது.
தேங்காய் எண்ணெயிலுள்ள லாரிக் அமிலம், இதயநோயை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் வெண்ணெயிலுள்ள
பால்மிட்டி அமிலங்கள் இதயநோயை ஏற்படுத்துகின்றன என்பதே உண்மை. மருத்துவர்கள் பரிந்துரைக்கும்
ஆலிவ் எண்ணெயை விட தேங்காய் எண்ணெய் பலபடி மேல். தமது எண்ணெய் வணிகத்தை விரிவுபடுத்த
மக்கள் பயன்படுத்தும் ஆரோக்கியமான எண்ணெய் மீதான அவதூறு பிரசாரம் கடந்த காலங்களில்
நடந்துள்ளது.