போகேந்திர ஜா(1923-2009)






CPI-banner.svg




போகேந்திர ஜா (1923-2009)

போகேந்திர ஜா மைதிலி பிராமண இனத்தில் பிறந்தவர். 1929-1933 பஞ்ச காலகட்டத்தில் வாழ்வாதாரமாக இருந்த நிலங்களை கந்துவட்டிக்காரர்களிடம் ஜாவின் பெற்றோர் இழந்தனர். கூலிவேலைக்கு செல்லும் வறுமை.  பீகாரிலுள்ள கிராமங்களை கவனிக்க வைத்ததும் கூட இதே சம்பவம்தான். தன் தந்தையிடமிருந்து இந்து வேத தத்துவங்களை கற்ற போகேந்திர ஜா, உண்மையான மதம் என்பது பொதுமக்களுக்கு நாம் செய்யும் சேவை என்ற தத்துவத்திற்கு வந்தார்.

குடும்ப வறுமையில் அக்காலகட்டத்தில் பள்ளிப்படிப்பை விட தேடிப்படித்த தொன்மை நூல்களும், சமூக சூழல்களும் ஜாவை சமூக கவனம் கொண்டவராக மாற்றியது. 1935 ஆம் ஆண்டு மதுபானி பகுதிக்கு காந்தி தீண்டாமை மற்றும் சட்டமறுப்பு இயக்க பிரசாரத்திற்கு வந்தார். கலியுக கொலைகாரர்களில் இருவர்,  பசுக்களை வைத்திருக்கும்  ஜின்னா, வேதங்களை பற்றியுள்ள காந்தி என சூர்யோதயா பத்திரிகையில் எழுதுமளவு பொதுவாழ்க்கையில் இடதுசாரி வேகம் கொண்டிருந்தார் ஜா. வெறும் எழுத்தோடு நின்றுவிடாமல் குடும்பமே எதிர்த்தாலும் சமபந்தி போஜனம் நடத்துவது என மாறியிருந்தவர் காந்தியின் ராம ராஜ்யன் என்பதை பொதுவுடைமை சமுதாயமெனவே கனவு கண்டார். ஆக்ராவில் செயல்பட்டு வந்த சோசலிச பதிப்பகம் மூலமாக நேரு, போஸ் ஆகியோரின் எழுத்துக்களை படித்தவர் இப்பதிப்பகத்திலதான் முதன்முறையாக லெனின், மார்க்ஸ் எழுத்துகளையும் படித்து பிரமித்தார்.

1940 ஆண்டு எம்.என்.ராய், ராகுல் சங்கிருத்தியான், ராம்தாரி திங்கர், ராம்விரிக்ஷா பெனிபுரி ஆகியோரை சந்தித்து பேசியதில் மக்கள் ஒன்றிணையாமல் ஆங்கிலேயரை வெளியேற்றமுடியாது என முடிவுக்கு வந்தார். தன்னை சத்தியாகிரகி கம்யூனிஸ்ட் என கூறிக்கொண்டது இக்காலகட்டத்தில்தான். ஹைதராபாத்தை இந்தியாவில் இணைப்பதை முதலாளித்துவத்திற்கு எதிரான போர் என்றவர், அதனை இந்தியப்பகுதி என்றே பேசினார். காந்தியை ஈஸ்வர் கொன்றார், ஒற்றுமையை அல்லா அழித்தார் என பின்னாளில் துணிச்சலாக பேசியவர் கம்யூனிசத்திலிருந்து காங்கிரஸ் மனிதராக மெல்ல மாறினார்.

கம்யூனிய கருத்துக்களின் சாய்வு கொண்டிருந்தாலும் பிராமண தன்மை அவரை நிறையவே குழப்பியிருந்தது. ராமனை தேசிய நாயகனாக கருதியவர் முஸ்லீம்கள் இந்திய கலாசாரத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று பேசினார். தான் மதம் சார்ந்தவனில்லை என்றவர் அதர்மி கிடையாது என பேசியதை எப்படி புரிந்துகொள்வது?

"திவானின் மகன் காந்தி, கோடீஸ்வரரின் மகன் நேரு. பிரிவினையே காந்தியை கொன்றது கோட்சே அல்ல; பிரிவினை முழுமையுற்ற முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கே சென்றிருந்தால் இந்தியாவில் தீவிரவாதம் என்ற சொல் உருவாகியிருக்காது. சுதந்திர இந்தியாவில் இந்துக்களை முஸ்லீமாக மாற்றுகிறார்கள். ஆனால் இதனை திருப்பிசெய்ய முடியுமா? காஷ்மீரை பாகிஸ்தான் குறிவைப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முழு இந்தியாவும் தேவையாக உள்ளது" என்று பேசி பரபரப்பை கிளப்பினார்.

                                                                                                                              (நிறைந்தது)


தமிழில்: ச.அன்பரசு
- நன்றி: ராகேஷ் அங்கித்
மூலம்:பவுன்டைன் இங்க்





பிரபலமான இடுகைகள்