உண்மையான தகவல்களுக்கு பணம் கொடுங்கள்!
முத்தாரம் Mini
சுதந்திரத்திற்கு பிக் டேட்டா
பிரச்னையா?
உங்களுடைய உணர்வுகள், விருப்பங்கள்
ஆகியவை பிறர் புரிந்துகொள்ளும் அவசியமில்லாத தனியுரிமைதானே! ஆனால் தகவல் நிறுவனங்கள்
தனிப்பட்ட நபர்களைப் பற்றி சேகரிக்கும் தகவல்கள் கண்காணிப்பில் உள்ள நிலைமையை ஏற்படுத்தும்.
உங்களது விருப்பங்கள், தேவைகள் அனைத்தும் உங்கள் கையைவிட்டு போய்விடும்.
தகவல்களுக்கு ஏன் கட்டணம் கொடுக்க கூறுகிறீர்கள்?
இலவச செய்தி என்பது செய்திதுறைக்கு அபாயகரமானது. இதில் எவை மக்கள்
கவனத்தை பெறும் என கூறுங்கள்? உணவு, உடைகளுக்கு காசு கொடுக்கும்போது தரமான செய்திகளுக்கு
ஏன் கட்டணம் கொடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?
நீங்கள் தெளிவாக எழுதினாலும் உங்கள் எழுத்து பலருக்கும் புரியவில்லை
என்கிறார்களே?
காரணம், அவர்கள் புரிந்துகொள்ள விரும்பாததுதான். சிறிய நூலின்
மூலம் அத்தனை விஷயங்களையும் புரிய வைத்துவிடமுடியாது. நான் எழுதிய நோக்கத்திலேயே நூலிலுள்ள
விஷயங்களை ஒருவர் புரிந்துகொ்ள்ள முடியும் என்ற அதீத தன்னம்பிக்கையும் எனக்கு கிடையாது.
-யுவல் ஹராரி, இஸ்ரேல் வரலாற்று
எழுத்தாளர்.