கேத்தரின ஜான்சன் தெரியுமா?





Image result for catherine johnson



மனிதக்கணினி கேத்தரின் ஜான்சன்!

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பியதில் நாசா ஆராய்ச்சியாளர் கேத்தரின் ஜான்சன் முக்கியமானவர். நூறுவயதை தொடவிருக்கும் இவர் குடியரசுத்தலைவரின் பதக்கம் பெற்றவர். இவரைக் குறித்த பிட்ஸ் சில…

படிப்பில் பாயும்புலி!

மேற்கு வர்ஜீனியாவில் பிறந்த(ஆக.29,1918) கேத்தரின், பள்ளியில் சேரும்போதே புத்திசாலித்தனத்தால் 2 ஆம் வகுப்பில் சேர்ந்தவர். பத்தாவது வயதில் மேல்நிலைப்படிப்பில் இணைந்து பதினெட்டு வயதில் பட்டம்(கணிதம், பிரெஞ்சு) பெற்றேவிட்டார். 1939 ஆம் ஆண்டு திருமணமானபோது வர்ஜீனியா பல்கலையில் பட்டம் படிக்க விண்ணப்பித்த முதல் கருப்பினப்பெண் இவர்தான்.

நாசாவின் நிராகரிப்பு!

1950 ஆம் ஆண்டு, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் பணியில் தேவையான கணிதங்களை செய்ய பெண்களை தேர்ந்தெடுத்த நாசா, கேத்தரினை முதல்முறை நிராகரித்து இரண்டாம் முறை அவரை தேர்ந்தெடுத்தது. ஜான் கிளென் நிலவுக்கு செல்லும் பயணத்தில் கேத்தரினின் பங்கு மறுக்க முடியாத ஒன்று.

நூல்களும் பதக்கமும்!

பள்ளி மாணவர்களுக்கான விண்வெளி நூல்களை துணை எழுத்தாளராக எழுதிய பெருமை கேத்தரினுக்கு உண்டு. 1969 ஆம் ஆண்டு நாசா வீரர்கள் நிலவில் இறங்க, உதவிய கேத்தரினுக்கு 2015 ஆம் ஆண்டு ஒபாமா, அதிபர் பதக்கத்தை வழங்கினார்.