சிலிகா ஏரியில் அமைகிறது ஏர்போர்ட்!
ஏரியில் ஏர்போர்ட்!
இந்தியாவின் முதல் சதுப்புநிலமாக 1981 ஆம் ஆண்டு பெருமையுடன்
அறிவிக்கப்பட்ட ஒடிஷாவின் சிலிகா ஏரி தற்போது அபாயத்தில் உள்ளது.
தற்போது சிலிகா பகுதிக்கு
விமானங்களை இயக்குவதற்காக, அங்கு, விமானநிலையம் அமைக்க விமான ஆணையம் முடிவெடுத்துள்ளது
சூழல் ஆர்வலர்களை திடுக்கிட வைத்துள்ளது. ஏரியை நம்பியுள்ள இரண்டு லட்சம் மீனவர்களின்
வாழ்க்கை இதனால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 224 வகை பறவைகள், 317 வகை மீன்கள்,
729 நீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதோடு 150 க்கும் மேற்பட்ட இர்ராவாடி டால்பின்களும்
சிலிகா ஏரியில் வாழ்கின்றன.
“சைபீரியா, காஸ்பியல்
கடல் பகுதியிலிருந்து 75 க்கும் மேற்பட்ட பறவைகள் சிலிகா ஏரிக்கு ஆண்டுதோறும் வருகின்றன.50
க்கும் மேற்பட்ட சிற்றாறுகளின் நீர் இங்கு கலக்கின்றது. விமானநிலையம் சூழலுக்கு பேரழிவை
விளைவிக்கும்” என்கிறார் சூழல் ஆர்வலர் தபன் பதி.
“விமானநிலையம்”அமைப்பதற்கு ஹிராகுட் அல்லது கோலா நீர்த்தேக்கம்
தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது” என்கிறார் சிலிகா மேம்பாட்டு ஆணையத்தில் முன்னாள்
தலைவரான அஜித் பட்னாயக்.