இடுகைகள்

அன்பு பரிசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துலிப் மலர் ஏ டூ இசட்- தகவல்களை அறிந்துகொள்ளலாம் வாங்க!

படம்
  உணர்வுகளை சொல்லும் மலர்!  தூலிப் மலர், வெள்ளை, சிவப்பு, ரோஸ், மஞ்சள் என பல்வேறு நிறங்களில் பூக்கிறது. அல்லி மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. தூலிப் மலரில் மட்டும் 75 இனங்கள் அறியப்பட்டுள்ளன. தெற்கு ஐரோப்பா தொடங்கி மத்திய ஆசியப் பகுதிகள் வரை பயிரிடப்படுகிறது. 1055ஆம் ஆண்டு தொடங்கி உலகில் பயிரிடப்படும் தூலிப், ஒட்டமான் பேரரசைக் குறிக்கும் அடையாளமாக கருதப்படுகிறது.  அறிவியல் பெயர் தூலிபா (Tulipa) குடும்பம் லிலியாசியே (Liliaceae) வரிசை  லிலியாலேஸ் (Liliales) ஆயுள்  5 ஆண்டுகள் பூக்கும் காலம் டிசம்பர் முதல் மே மாதம் வரை செடியின் உயரம் 10 செ.மீ முதல் 71 செ.மீ. வரை தாயகம்  மத்திய ஆசியா, துருக்கி மலரின் பொருள் அன்பு (சிவப்பு), விசுவாசத்தை (வெள்ளை), உற்சாகம் (மஞ்சள்)வெளிக்காட்டும் மலர்கள் தூலிப் மலரின் பாகங்கள் இதழ் (Petal) அடர்த்தியான நிறங்களைக் கொண்ட தூலிப் மலரின் இதழ்கள். இவையே பூச்சிகளை ஈர்ப்பதற்கான காரணம்.  மகரந்தப்பை (Anther) மகரந்த துகள்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது.  மகரந்த கம்பி (Filament) மகரந்தப்பையைத்  தாங்குகிறது புல்லிவட்டம் புற இதழ் (Sepal) பூவை பாதுகாக்கும் இலைப்பகுதி சூல் முட