துலிப் மலர் ஏ டூ இசட்- தகவல்களை அறிந்துகொள்ளலாம் வாங்க!
உணர்வுகளை சொல்லும் மலர்!
தூலிப் மலர், வெள்ளை, சிவப்பு, ரோஸ், மஞ்சள் என பல்வேறு நிறங்களில் பூக்கிறது. அல்லி மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. தூலிப் மலரில் மட்டும் 75 இனங்கள் அறியப்பட்டுள்ளன. தெற்கு ஐரோப்பா தொடங்கி மத்திய ஆசியப் பகுதிகள் வரை பயிரிடப்படுகிறது. 1055ஆம் ஆண்டு தொடங்கி உலகில் பயிரிடப்படும் தூலிப், ஒட்டமான் பேரரசைக் குறிக்கும் அடையாளமாக கருதப்படுகிறது.
அறிவியல் பெயர்
தூலிபா (Tulipa)
குடும்பம்
லிலியாசியே (Liliaceae)
வரிசை
லிலியாலேஸ் (Liliales)
ஆயுள்
5 ஆண்டுகள்
பூக்கும் காலம்
டிசம்பர் முதல் மே மாதம் வரை
செடியின் உயரம்
10 செ.மீ முதல் 71 செ.மீ. வரை
தாயகம்
மத்திய ஆசியா, துருக்கி
மலரின் பொருள்
அன்பு (சிவப்பு), விசுவாசத்தை (வெள்ளை), உற்சாகம் (மஞ்சள்)வெளிக்காட்டும் மலர்கள்
தூலிப் மலரின் பாகங்கள்
இதழ் (Petal)
அடர்த்தியான நிறங்களைக் கொண்ட தூலிப் மலரின் இதழ்கள். இவையே பூச்சிகளை ஈர்ப்பதற்கான காரணம்.
மகரந்தப்பை (Anther)
மகரந்த துகள்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது.
மகரந்த கம்பி (Filament)
மகரந்தப்பையைத் தாங்குகிறது
புல்லிவட்டம் புற இதழ் (Sepal)
பூவை பாதுகாக்கும் இலைப்பகுதி
சூல் முடி (Stigma)
மகரந்தங்களைப் பெறும் பகுதி
சூலகத் தண்டு (Style)
சூல்முடியைத் தாங்கியுள்ள பகுதி
சூலகம் (Ovary)
விதைகளை உற்பத்தி செய்யும் பகுதி
பூக்காம்பு (Pedicel)
பூவைத் தாங்கியிருக்கும் தண்டுப்பகுதி
தூலிப் மலரின் கிழங்குப்பகுதி
பூக்குமிழ் (Flower bud)
வளரவிருக்கும் பூச்செடியின் பூ, குமிழில்தான் பாதுகாக்கப்படுகிறது
வெளிப்புறப்பகுதி (Tunic)
கிழங்கைக் சுற்றியுள்ள வெளிப்புற காகிதம் போன்ற பகுதி
வேர்கள் (Roots)
கிழங்கின் கீழ்ப்பகுதியில் வளரும் வேர்ப்பகுதி
செதில்பகுதி (Scales)
வடிவம் மாறிய இலைப்பகுதி, உணவு சேமிக்க உதவுகிறது
அடிப்பகுதி தண்டு (Basal stem)
கீழ்ப்புறத்தில் உள்ள தண்டுப்பகுதி
அடர்த்தியான நிறம் கொண்ட தூலிப் மலர்களுக்கு, செல்ஃப் கலர்ட் (Self coloured)என்று பெயர். ஒரே பூவில் பல்வேறு நிறங்கள் மாறுபட்ட விதமாக உருவானால் அதை புரோக்கன் (Broken)என தாவரவியலாளர்கள் அழைக்கின்றனர். பூவில் ஏற்படும் பல்வேறு நிறங்களின் சேர்க்கைக்கு ஆபத்தற்ற வைரஸ் தொற்று காரணமாகும்.
தூலிப்பின் பூக்காம்பில் ஒரு பூ தான் இருக்கும். பூக்கள் கப் அல்லது நட்சத்திர வடிவில் இருக்கும். தூலிப்பில் பொதுவாக மூன்று பூவிதழ்கள், மூன்று இலைகள் இருக்கும். இலைகளில் மெழுகு இருப்பதால் பளபளப்பாக இருக்கும். பூவின் மத்தியில் ஆறு மகரந்தப்பைகள் உண்டு.
வளமான மண்ணில் விளையும் பூத்தாவரம், தூலிப். இதன் தண்டுக்கிழங்கை நிலத்தில் பத்து அல்லது 20 செ.மீ. ஆழத்தில் புதைக்கவேண்டும். இதனை சரியாக பராமரித்து நீர்பாய்ச்சி வந்தால் சில ஆண்டுகளுக்குப் பயன்தரும்.
கரோலஸ் |
). தூலிப் பூவில் ஏற்படும் வைரஸ் தொற்றால் ஏற்படும் நிறமாற்றத்தை(broken) அடையாளம் கண்டவதும் கரோலஸ்தான்.
1634 -1937 வரையிலான காலகட்டத்தில் உலகமெங்கும் தூலிப் மலர்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இதனை தூலிப் மேனியா (Tulip mania) என்று வரலாற்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நெதர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக தூலிப் இதழ்களை மக்கள் உணவாக உண்டனர்.
தாக்கும் நோய்கள்
தூலிப் ஃபயர் (Tulip fire)
செடியில் இலை, பூ என பல்வேறு பாகங்களை பாதிக்கும் பூஞ்சை நோய். பாதிக்கப்பட்டபகுதி நிறம் மாறி, எரிந்துபோனதுபோல மடங்கி காணப்படும்.
Tulip breaking virus (TBV)
வைரஸ் காரணமாக பூக்களின் நிறம் மாறி, கோடுகள் உருவாகின்றன. இலைகள், பூக்களில் தொடங்கும் பாதிப்பு மெல்ல தாவரத்தை அழிக்கிறது.
அப்ஹைட்ஸ் (Aphids) எனும் சிறு பூச்சி, தூலிப் தாவரத்தை தாக்கி சாறை உறிஞ்சுகிறது. இதன் உடலில் டிவிபி வைரசும் இருப்பதால், தூலிப் தாவரங்களுக்கு எளிதாக வைரஸ் பரவுகிறது.
மேற்கோள் நூல்கள், வலைத்தளங்கள்
https://www.proflowers.com/blog/history-and-meaning-of-tulip/
https://www.britannica.com/plant/tulip
https://www.sciencedirect.com/topics/agricultural-and-biological-sciences/tulipa
https://horticultureandsoilscience.fandom.com/wiki/Tulip?file=Harvester.jpg
https://www.jardineriaon.com/ta/que-son-las-inflorescencias.html
https://www.thegreenpinky.com/common-tulip-problems/
https://www.sciencekids.co.nz/sciencefacts/plants/tulips.html
நன்றி - பட்டம் இதழ்
pixabay images
கருத்துகள்
கருத்துரையிடுக