டிஷ்யூ தாள்கள் உருவாக்கப்பட்ட வரலாறு! - உண்மையா, உடான்ஸா
















ஆர்மாடில்லோ என்ற விலங்கின் ஓட்டை, துப்பாக்கித் தோட்டா கூட துளைக்காது! 


உண்மையல்ல. சிலர், அதனை உயர்த்திக் கூற தோட்டா கூட துளைக்க முடியாது என கூறியிருப்பார்கள். ஆர்மாடில்லோ என்ற பாலூட்டி விலங்கின் ஓடு, கடினமானது தான். இதன் ஓடு, ஆஸ்டியோடெர்ம்ஸ் (Osteoderms) என்ற வேதிப்பொருளால் உருவாகிறது.  ஆர்மாடில்லோ, எறும்புகள், கரையான்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது. 

ஸ்காட்லாந்தின் பனியைக் குறிப்பிட நிறைய வார்த்தைகள் உண்டு!


உண்மை. அந்நாட்டில் பனியைக் குறிப்பிட மொத்தம் 421 வார்த்தைகள் உள்ளன. அதில் சிலவற்றைப் பார்ப்போம். ஸ்னீஸ்ல் (sneesl), ஃபீஃபில் (feefle), ஃபிலின்க்டிரின்கின் (flinkdrinkin). 

ஆக்டோபஸ் ஒரு முறையில் 56 ஆயிரம் முட்டைகளை இடும்!

உண்மை. தோராயமாக பசிஃபிக் ஆக்டோபஸ்  கருவுற்று 56 ஆயிரம் முட்டைகளை இடுகிறது. முட்டைகள் நீரின் தன்மையால் அதன் தாயிடமிருந்து பிரிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போதும், தாய் ஆக்டோபஸ் முட்டைகளை தன்னை விட்டு பிரியாமல் பார்த்துக்கொள்கிறது. 

விஷவாயு முகமூடிகளுக்காகவே டிஷ்யூ தாள்கள் உருவாக்கப்பட்டன!


முதல் உலகப்போரின்போது, அமெரிக்க நிறுவனமான கிம்பர்லி கிளார்க் மெல்லிய காகித தாள்களை தயாரித்தது. அப்போது பருத்தி துணிகளுக்கு கடும் தட்டுப்பாடு இருந்தது. கிம்பர்லி தயாரித்த தாள்களை ராணுவம் விஷவாயு முகமூடிகளுக்கு ஃபில்டராக பயன்படுத்தியது. போர் முடிந்த பிறகு, அறிவியலாளர்கள் தாளை ஆராய்ச்சி செய்து இன்னும் மென்மையானதாக மாற்றினர். அதனால் இன்றும் டிஷ்யூ தாள்களை எளிதாக தினசரி பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். 

பெரும்பாலான டிஸ்னி அனிமேஷன் பாத்திரங்கள் கையுறை அணிந்திருக்கும்!


உண்மை. 1929ஆம் ஆண்டு ஆப்ரி ஹவுஸ் என்ற அனிமேஷன் படத்தில் மிக்கி மௌஸ் முதன்முதலாக கையுறை அணிந்திருந்தது. இப்படி அணிவதன் மூலம் எளிதாக  அனிமேஷனுக்கு பயன்படுத்த முடிந்தது. இன்னொன்று, 1957இல், எலிதான் பாத்திரம் என்றால் அதனை முடிந்தளவு மனிதன் போலவே காட்ட முயன்றோம் என வால்ட் டிஸ்னி கூறினார். 


https://www.rd.com/list/interesting-facts/

கருத்துகள்