வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்போது பயிர்கள் அனைத்துமே பாதிக்கப்படும்! - ரேச்சல் பெஸ்னர் கெர்
ரேச்சல் பெஸ்னர் கெர்
ஆசிரியர், கார்னெல் பல்கலைக்கழகம் (அமெரிக்கா)
ரேச்சல், கல்விப்பணியோடு சமூக ஆராய்ச்சியாளராக சூழல் மற்றும் உணவு பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
உணவு பாதுகாப்பில் என்னென்ன மேம்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்?
வெப்ப அலைகள் அல்லது வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்போது, அனைத்து பகுதியில் உள்ள பயிர்களும் பாதிக்கப்படும். இதன் விளைவாக பிற பகுதிகளில் இருந்து கூட உணவை நம்மால் பெறுவது கடினம். ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சிறு தீவுகளில் ஊட்டச்சத்து பாதிப்பு கூட ஏற்படலாம். இதுபற்றி நாங்கள் செய்த சூழல் ஆய்வில், உணவுபாதுகாப்பு எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தோம்.
நீங்கள் ஆப்பிரிக்காவில் செய்த காலநிலை மாற்றசெயல்பாடுகள் என்னென்ன?
நான் இருபதாண்டுகளாக மலாவி, தான்ஸானியாவில் வேலை செய்து வருகிறேன். அங்கு விவசாயிகள் பல்வகையான பயிர்களை பயிரிடவும், மண்ணை சோதிக்கவும், இயற்கையான பொருட்களை பயன்படுத்தவும் ஊக்கப்படுத்தினேன். இதன்மூலம் உணவுப்பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறைவு பிரச்னையை எளிதாக தீர்க்கலாம்.
வெப்பஅலை, இந்தியாவின் விவசாய துறையை எந்தளவு பாதிக்கும்?
எங்களது ஆய்வு அறிக்கை மூலம், காலநிலை மாற்றங்கள் பயிர்களின் வளர்ச்சி நிலையை பாதிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளோம். பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தாதபோது, உணவுப்பயிர்கள், பண்ணை விலங்கு வளர்ப்பு ஆகியவை சாத்தியமாக வாய்ப்பு குறைவு.
heatwaves impact crops food security needs eco system based inclusive steps
(srijana mitra)
TOI may 21,2022
https://cals.cornell.edu/
https://research.cornell.edu/news-features/farmer-led-climate-action
கருத்துகள்
கருத்துரையிடுக