பிட்ஸ் - தேனீக்கள்

 










பூமியில் 20 ஆயிரம் தேனீ இனங்கள் உள்ளன. அன்டார்டிகாவைத் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் தேனீக்கள் வாழ்கின்றன. 2 மி.மீ. நீளத்திற்கும் குறைவான தேனீக்களும் உண்டு. இதில் பெரியது, 4 செ.மீ. நீளம் கொண்ட வாலஸ் ஜெயன்ட் பீ. 

தேனீக்களில் சில இனங்களைத் தவிர பிற தேனீ இனங்கள் (Honey bees, bumble bees, stingless bees) காலனியாக ஒன்றாக இணைந்து வாழ்கின்றன.  5 கி.மீ. தூரத்திற்கும் அதிக தொலைவுக்கு பயணித்துச் சென்று தேனைச் சேகரித்து கூடு திரும்புகின்றன. 

அனைத்து தேனீக்களும் தேனை சேகரித்து வைப்பதில்லை. 7 தேனீ இனங்களே தேனை சேகரித்து வைக்கின்றன. 

9 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் தேனீக்களிடமிருந்து தேனைப் பெற்று வருகின்றனர். உலகில் நடைபெறும் 75 சதவீத மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களே முக்கியக் காரணம். 

National geographic kids Mar.2022

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்