சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாக மாற்றுகிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?
சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறதா?
உலகம் முழுக்கவே சூரிய ஒளி மிகுந்த நாட்களை உற்சாகமான நாளாகவே நினைக்கிறார்கள். சூரிய வெளிச்சம், மனித உடலின் உயிரியல் கடிகாரம் சிறப்பாக செயல்பட அவசியம். புற்றுநோயை விலக்கும், ரத்த அழுத்த பாதிப்பை குறைக்கும் வைட்டமின் டி சத்து, சூரிய ஒளியில் உள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் செய்த ஆய்வில் சூரிய ஒளி உற்சாகத்தையோ, மேகமூட்டமான மனநிலை மன அழுத்தத்தையோ உருவாக்குவதில்லை என தெரிய வந்தது. இந்த ஆய்வில் 38 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
ஃபாக்போ (Fogbow)என்றால் என்ன?
பனிக்காலத்தில் சிறிய பனித்துளிகளின் வழியே ஒளி ஊடுருவுகிறது. இதனால், ஒளிவிலகல் ஏற்பட்டு ஃபாக்போ உருவாகிறது. வளைய வடிவிலும் வெள்ளை நிறத்திலும் ஃபாக்போ இருக்கும். பனித்துளிகள், மழைத்துளிகளை விட அளவில் சிறியன.
https://www.sciencefocus.com/the-human-body/does-sunshine-make-us-happier-and-healthier/
https://journals.sagepub.com/doi/10.1177/2167702615615867
https://www.sciencefocus.com/planet-earth/what-is-a-fogbow/
கருத்துகள்
கருத்துரையிடுக