இடுகைகள்

கர்ப்பணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியச் சமூகத்தில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்கள் - கர்நாடக மாநிலம் முதலிடம்

      குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு - கர்நாடகம் முதலிடம் இப்படி தலைப்பு வைப்பது பெருமைக்குரியது அல்ல. ஆனால் குழந்தை திருமணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது ஆபத்தான திசையை நோக்கி சமூகம் பயணிப்பதைக் காட்டுகிறது. அண்மையில் என்சிபிசிஆர் என்ற குழந்தைகளின் உரிமைக்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 215 குழந்தைத் திருமணங்கள் கர்நாடகத்தில் நடந்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. இதற்கடுத்து அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஹரியாணா, ஆந்திரம், உபி, பீகார், ஜம்மு காஷ்மீர், டெல்லி ஆகிய மாநிலங்கள் வருகின்றன. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு கீழுள்ள 1.5 மில்லியன் சிறுமிகள் குழந்தை திருமணம் செய்யப்படுவதாக ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான இளையோர் பிரிவில் பதினாறு சதவீதம் பேர் குழந்தை திருமணத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு திருமணம் செய்விப்படுவது, சமூகத்தில் உள்ள பாலின பேதங்களை அடிப்படையாக கொண்டது. இந்த செயல்பாடு வழியாக அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன...

கர்ப்பிணிகளுக்கு சுவையுணர்வு மாறுவது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி கர்ப்பிணிகளுக்கு நாக்கின் சுவை ஏன் மாறுகிறது? புளி, சாம்பல் தேடி ஓடுகிறார்கள் என்று நேரடியாக கேட்காமல் மறைத்து கேட்கிறீர்கள். காரணம் ஒன்றுதான். உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் வேகமாக அதிகரிக்கும் காலகட்டம் அது. இதனால் உடலில் நடக்கும் மாறுதல்களால் நாக்கின் சுவை அறியும் தன்மை மாறுபடுகிறது. ஜிங்க் குறைபாட்டால் சுவை அறியும் தன்மை மாறுகிறது என்று முதலில் பலரும் நினைத்து வந்தார்கள். ஆனால், 2009ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் ட்ரைமெஸ்டரில் கர்ப்பிணிகளின் சுவையுணர்வு மாறுபடுவதில்லை. ஜிங்க் அளவிலும் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு பிரிஸ்டல் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், உடலில் சிறுநீர் பாதையில் பல்வேறு பிரச்னைகளை கர்ப்பிணிகள் சந்திப்பதாக கண்டறிந்து கூறினர். இதுதான் நாக்கின் சுவையுணர்வை பாதிக்கிறதா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் நாக்கின் சுவை உணர்வுக்கும் நம் மூளைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நன்றி - பிபிசி