இடுகைகள்

நாட்டார் தெய்வங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆணக்கொலைகளால் வணங்கப்படும் நிலைக்கு உயர்ந்த நாட்டார் தெய்வங்கள்- ஆ.கொ.சா. பெ.கொ.அ

படம்
  ஆணவக்கொலைச் சாமிகளும், பெருமித கொலை அம்மன்களும் ஆ.சிவசுப்பிரமணியன் காலச்சுவடு பதிப்பகம் மின்னூல்   திருநெல்வேலி, தூத்துக்கடி, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள நாட்டார் தெய்வங்களின் பூர்விக வரலாறு பற்றி இந்த ஆய்வு நூல் பேசுகிறது. நூலின் தொடக்கத்திலேயே நாட்டார் தெய்வங்கள் எப்படி பெருந்தெய்வ வழிபாட்டின் ஓரங்கமாக மாற்றப்படுகிறது என்பதை விளக்கி இந்துத்துவ சக்திகள் செயல்படுவதை ஆசிரியர் விளக்கி விடுகிறார். ஆகவே, நாட்டார் தெய்வங்கள் என்பது வேறு. அதன் வழிபாட்டு முறைகளே வேறு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அதில் உயிர்ப்பலி, கறிச்சோற்று படையல், கொடை, முளைப்பாரி ஆகியவை உண்டு. பெருந்தெய்வ வழிபாட்டில் இவையெல்லாம் இருக்காது. நாட்டார் தெய்வங்கள் முன்னெப்போதோ நம் கூடவே வாழ்ந்து வந்தவர்கள்தான். அவர்கள் சக மனிதர்களால் சாதி பெருமிதம், பொறாமை, காதல், சொத்து, பாலியல் வன்முறை, குடும்ப கௌரவம் ஆகியவற்றுக்காக பலியானவர்கள்தான். இவர்கள் மீது பின்னாளில் ஏற்படும் குற்றவுணர்ச்சி காரணத்தால் இறந்து போனவர்களை கொன்ற குடும்பத்தினர், கொல்லப்பட்டவரின் உறவினர்கள் சுதை சிற்பமாக வடித்து வழிபடத் தொடங்குகிறார்கள்