இடுகைகள்

தட்பவெப்பநிலை கணிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புயலை எப்படி கணிக்கிறார்கள்?

படம்
புயலை கணிக்கலாம் ! தகவல் சேகரிப்பு செயற்கைக்கோள்களிலிருந்து பெறும் காற்று , ஈரப்பதம் குறித்த தகவல்களை பூமியிலுள்ள மையங்கள் சேகரித்து தொகுப்பாக்குவது முதல் பணி . தட்பவெப்பநிலை கணிப்பு உலகமெங்கும் உள்ள தட்பவெப்பநிலையை ஆறுமணிநேரத்திற்கு ஒருமுறை கணிப்பது முக்கியம் . உலகிலுள்ள அனைத்து பகுதிகளும் சிறுதுண்டுகளாக அட்டவணைப்படுத்தப்பட்டு தகவல்களை உடனே பெறுகிறார்கள் . மாற்றங்கள் அநேகம் சூப்பர் கம்ப்யூட்டர்கள் மூலம் மாற்றங்களின் பரவல்களை கண்காணித்து விளைவுகளை யூகிப்பது அடுத்தகட்டப்பணி . புயல் வேகம் , மழை அளவு , கடல் அழுத்தம் ஆகியவற்றை காட்சிப் படங்களாக உருவாக்குவதும் அதனை மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் உடனடியாக அறிவிப்பதும் இறுதிப்பணிகள் . தட்பவெப்பநிலையை துல்லியமாக கவனிப்பதன் மூலம் புயல் , வெள்ள அபாயங்களால் ஏற்படும் உயிரிழப்பு , சொத்துக்கள் இழப்பையும் தடுக்க முடியும் .