இடுகைகள்

தமிழ்நாடு நாள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனித்துவ தமிழ்நாடு நாள் - கொண்டாட்டம் தொடக்கம்!

படம்
giphy.com தமிழ்நாடு நாள் நவம்பர் 1,1956 இனி ஆண்டுதோறும் தமிழ்நாடு தினத்தை கொண்டாட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தமிழ்நாடு நாள் அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக ரூ.10 லட்சரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.  1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கைப்படி மெட்ராஸ் ராஜதானி பிரிக்கப்பட்டது. இதில் இணைந்திருந்த ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை தனி மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர், பின்னாளில் மாநில முதல்வரான சி.அண்ணாத்துரையால், 1968ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று மெட்ராஸ் ஸ்டேட், தமிழ்நாடு என பெயர்மாற்றம் பெற்றது. நவம்பர் 1ஆம் தேதியை கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றன. இந்தவழியில் தமிழ்நாடு அரசு,  இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு நாளை கொண்டாட உள்ளதாக கடந்த 25ஆம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் சிந்தனை, வங்கப்பிரிவினை காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. மொழிவாரி மாநிலமாக 1908 இல் பீகார் மாநிலம்