பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பற்றிய காரண காரியங்களை விளக்கும் அம்பேத்கர்!
பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பி ஆர் அம்பேத்கர் தமிழில் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் அம்பேத்கர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டால் அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்க முடியும்? முஸ்லீம்களை அவர் விமர்சித்து எழுதியிருக்கக்கூடும். சரிதான். அந்த வகையில் முஸ்லீம்களை விமர்சிப்பதோடு, அவர்கள் படையெடுப்பு வழியாக இந்தியா அடைந்த சேதம், கோவில்கள் இடிப்பு, மக்கள் பலி என பலவற்றையும் அம்பேத்கர் ஆவணப்படுத்தி எழுதியுள்ளார். நூலில் அவர் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தனது போக்கில் அணுகி அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதியுள்ளார். இதை ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்புகளின் உள்நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளார். நூலைப் படித்து எழுதும்போது இந்திய ஒன்றியத்தின் சுதந்திர தினம் கடந்துபோய்விட்டது. ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் இந்தியா பிரிவினை பற்றி பேச, ஆலோசிக்க, சரியான காலம்தான். நூலில், அம்பேத்கர் முஸ்லீம்கள் ஏன் தனிநாடு கேட்கிறார்கள், அதற்கான தேவை என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அதேசமயம் இந்து மகாசபையினரின் இந்து அரசு அமைந்தால் ஏற்படும் பாதகங்களையும் அவர் கூறியிருக்கிறார். இந்துக்களின் சா...