இடுகைகள்

பூமர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1999ஆம் ஆண்டுக்குப் பிறகு நாம் பயன்படுத்தும் வார்த்தைகள்!

படம்
  நாம் பல்லாண்டுகளாக குடித்து வரும் டீ யின் விலை மெல்ல விலை உயர்ந்து இன்று ஃபில்டர் காபிக்கு நிகராக வளர்ந்துவிட்டது. அனைத்து துறைகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளருவது போல இதிலும் நிறைய டீ, காபி பேவரேஜ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ந்துவிட்டன. உதா. சாய் கிங்ஸ், சாய் டைம், கோத்தாஸ் காபி, லியோ காபி, டேன் டீ  அதுபோல நாம் பயன்படுத்தும் பல்வேறு வார்த்தைகளும் நிறைய மாறிவிட்டன. இதெல்லாம் தொண்ணூறுகளுக்குப் பிறகு தான் அதிகரித்துள்ளன. இப்படி நாம் புழங்கிக்கொண்டிருக்கும் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.  விலாக் இதனை 90களில் பிறந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். வீடியோவாக ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை இப்படி கூறலாம். இந்த விலாக் புகழ்பெற்றது 2005ஆம் ஆண்டில் தான்.  செல்ஃபீ 2013ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷனரியில் சேர்க்கப்பட்ட வார்த்தை. இன்று எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், செல்ஃபீ எடுக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லையெனில் வரலாறு நம்மைக் காறித்துப்பாதா? இதற்காகவே சீனா கடுமையாக உழைத்து ஏராளமான செல்ஃபீ கேமரா போன்களை தயாரித்து உலகிற்கு சல்லீசான விலையில் வழங்குகிறது.  கோஸ்டிங் திட

ஓகே பூமர் சொல்லலாமா? - பெருசுக்கும் சிறுசுக்கும் லடாய் மூளுகிறது!

படம்
தொண்ணூறுகளுக்குப்பிறகு பிறந்தவர்களுக்கும், அறுபதுகளில், எண்பதுகளில் பிறந்தவர்களுக்கும் சண்டை தொடங்கிவிட்டது. இப்பிரச்னை தலைமுறை சிக்கலாக குடும்பங்களில் முன்னர் இருந்து வந்தது. இன்று தெருவுக்கும் வந்துவிட்டது. சிறிய வார்த்தைதான். ஓகே பூமர் என்ற வார்த்தை நேரடியாக அனைத்து வயதானவர்களுக்கும் எதிராக சொல்லப்பட்டு வருகிறது. பேபி பூமர்கள் இப்படி வார்த்தை ஆயுதம் எடுத்ததால், வயதான ஆட்கள் என்ன சொல்வதென்று பதறி நழுவி வருகிறார்கள். உங்களுக்கு வயசாச்சு என்று கூறுவதை இப்படி சொல்லுகிறார்கள் என மூத்த தலைமுறைக்கும் , நவீன தலைமுறைக்கும் லடாய் நீடிக்கிறது. பொதுஇடங்களில் டிவிகளில் சொல்வது வேறு. அதுவும் ஆபீஸ்களில் சொல்லிவிட்டால் என்னாவது? அண்மையில் நியூசிலாந்து சட்ட வல்லுநர் சூழல் வெப்பமயமாதல் பற்றி மசோதா பற்றி பேசத் தொடங்கினார். ஆனால் அவரது வாதத்தை மூத்த அதிகாரி இடைமறித்து பேசினார். உடனே ஆவேசமான இளையவர் ஓகே பூமர் சொல்லிப்பேச சங்கடம் உருவானது. ஓகே பூமர் என்ற சொல்லைப் பேசினால் சட்டப்படி குற்றம் என்று இன்னும் அரசு கூறவில்லை. வயது ரீதியான தீண்டாமை என்பதைத் தடுக்க வெளிநாடுகளில் சட்டம் உள்ளது. இ