இடுகைகள்

ஹிண்டன்பர்க் அறிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேராசை பூதம் 2 - ஹிண்டன்பர்க் அறிக்கையின் தமிழாக்கம் - மின்னூல் வெளியீடு

படம்
  இன்று இந்தியாவில் மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை  பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அரசின் கொள்கை மாற்றங்களை பெருநிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கச்செய்து பயன் பெறுகின்றன. நாட்டின் பிரதமர் தொழில்நிறுவனங்களோடு நெருக்கமாக இருப்பது, அணுக்க முதலாளித்துவம் என்று கூறப்படுகிறது. இப்படி இருப்பதால் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நன்மை உண்டு. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொழிலதிபரின் வாராக்கடன்களுக்கு, வரிச்சுமையை சுமக்க வேண்டியது மக்கள்தான்.  அதானி குழுமம், பல்லாண்டுகளாக திட்டமிட்டு செய்த மோசடிகளை பேராசை பூதம் 3 நூல் விவரிக்கிறது. இதைப் படிக்கும்போது இப்படியெல்லாம் யோசித்து நிதி மோசடிகளை செய்ய முடியுமா என பிரமித்து அதிர்ச்சியடைவீர்கள்.  அந்தளவு நேர்த்தியாக திட்டமிட்டு இந்தியாவை மட்டுமல்ல வரி கட்டும் அத்தனை குடிமக்களையும் ஏமாற்றியுள்ளது அதானி குழுமம். மோசடிக்கு கௌதம் அதானியின் மொத்த உறுப்பினர்களுமே காய்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.   பங்குச்சந்தை நிதியை மடைமாற்றி தனது இஷ்டம்போல நிறுவனத்தின் மதிப்பை மாற்றிக் காண்பித்து அதை அடையாளம் கண

17. பத்திரிகையாளர்களை வழக்குகள்,ரெய்டு மூலம் மிரட்டிய அதானி - மோசடி மன்னன் அதானி!

படம்
  அதானி என்டர்பிரைசஸ், அதானி க்ரீன், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி க்ரீன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வது, பங்குத்தரகர்கள் பங்களிப்பு என்று பார்த்தால் பெரிதாக ஏதுமே இருக்காது. ‘’நாங்கள் அதானி குழுமத்தின் பங்குகளை,  உண்மையான பணப்புழக்கம் இன்மை, வட்டி இன்மை, துறையிலேயே 16 மடங்கு அதிக மதிப்பு ஆகியவை காரணமாக கைவிட்டோம்’’ என பங்குத்தரகர்  கூறினார். இவர் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகளைக் கைவிட்டதை அடுத்து கூறிய வாக்கியம்தான் இது. அதானி போர்ட் என்ற நிறுவனத்தைத் தவிர்த்து வேறு நிறுவனங்களின் பங்குகளை ஆராய எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை என்பதே உண்மை. இதற்கு குழுமத்தின் முதலீட்டு நிதி அளவே காரணம். Adani company Analyst covering per Bloomberg jan 23 Indian Company with similar market cap, Number of analysts covering Adani green energy 1 Bajaj finance: 33 analysis Adani enterprises 2 Larsen & Toubro: 44 analysis Adani Transmission 2 HCL technolog

16. நிலக்கரி மதிப்பை உயர்த்திக்காட்டி, மின்கட்டணத்தை ஏற்றிய அதானி - மோசடி மன்னன் அதானி

படம்
  மின் நிறுவனங்களின்கொண்டாட்டம்  அரசும், அதானி குழுமமும் விசாரணையின்போது அரசு... அதானி குழுமம் மீது போடப்பட்ட வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் வழக்கு விசாரணை, அந்த அமைப்பின் அதிகாரிகளாலேயே நிறுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணையில் கிடைத்த உண்மையான ஆதாரங்களை புறக்கணித்து அதானி குழுமத்தின் மின் உற்பத்தி சார்ந்த பொருட்களை வாங்கியதில் எந்த மோசடியுமில்லை என கூறப்பட்டது. முழுமையான ஆதாரம் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறினர். ‘’இஐஎஃப், ஏபிஆர்எல் ஆகிய நிறுவனங்கள் வினோத் அதானிக்கு தொடர்புடையவை என்றாலும் அதன் மதிப்பு, விலை என்பது பாதிக்கப்படவில்லை. பொருட்களின் விலை மதிப்பு ஏற்றம் பற்றிய குற்றச்சாட்டு எழுந்தாலும் அது உண்மையல்ல’’ (ப.278) என்று தீர்ப்பில் கூறப்பட்டது. வழக்கில் தொடர்புடைய, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். (ப.279) வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் மற்றொரு பிரிவு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். ஆனால் மேல்முறையீடு அமைப்பான செஸ்டாட், அதானி குழுமத்திற்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்று தீர்மானமாக கூறிவிட்டது. (ப.87)  

14. வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் திட்டமிட்ட மோசடி - மோசடி மன்னன் அதானி

படம்
  அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கணக்கு தணிக்கைகளை டெலோய்ட் அல்லது எர்னஸ்ட் அண்ட் யங் ஆகிய கணக்கு தணிக்கை நிறுவனங்கள் பார்த்து ஒப்புதல் அளித்துள்ளன. Adani Power limited SRBC & Co LLP Adani Ports & SEZ Limited Deloitte Haskins & Sells LLP Adani Transmission Limited Deloitte Haskins & Sells LLP Adani Green energy limited Joint Auditors SRBC & Co LLP and Dharmesh parikh & Co LLP   இந்த நிறுவனங்கள் ஒப்புதல் அளித்த கணக்கு தணிக்கை விவகாரங்களிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. 2022ஆம் ஆண்டு அதானி பவர் நிறுவனத்தின் கணக்கு இதற்கு உதாரணம். எஸ்ஆர்பிசி என்ற நிறுவனம் கணக்கு தணிக்கை செய்து ஒப்புதல் அளித்துள்ளது. ‘தகுதி பெற்றிருக்கிற நிறுவனம்’ என்று கூற முடிந்ததே தவிர நேரடியான அல்லது தகுதி இல்லை என்ற கருத்தை அளிக்க முடியவில்லை. (ப.206) ‘’பொருட்கள் சார்ந்த பலவீனம் நிறுவனத்தின் உள்ளே நிதி சார்ந்த ஆவணங்களில் காணப்படுகிறது. நிறுவனத்தின் நிதிநிலையைக் கூறுவதிலு