இடுகைகள்

காடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

4 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்க உலகிற்கு வரும் வாள் போராளி!

படம்
  கிரேட் மேக் ரிடர்ன் 4000 இயர்ஸ் எகோ காமிக்ஸ் ரீட்மங்காபேட்.காம்  தொன்மைக்கால வீரர்களின் தலைவன் லூகாஸ் ட்ராமன். இவர் தலைமையில் ஐந்து வீரர்கள் இணைந்து வேலை செய்து தீயசக்திகளை அழிக்க முயல்கிறார்கள். ஒரு சண்டையில், டெமிகாடின் தலைவரான லார்ட் மூலம் லூகாஸ் சிறைபிடிக்கப்படுகிறார். 4 ஆயிரம் ஆண்டுகள் சிறைவாசம் கழித்து விடுவிக்கப்படுகிறார். அவரது ஆன்மா, பிளாக் குடும்ப மூன்றாவது பிள்ளையான ஃபிரே பிளாக்கின் உடலில் புகுகிறது.  ஃபிரே பிளாக், மந்திரவாதம் கற்க முயன்று அதில் தோற்று, பள்ளி நண்பர்களால் அடித்து உதைக்கப்படுகிறான். அவனது குடும்பத்தாரால் ஊதாசீனம் செய்யப்படுகிறான். அவன் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தபிறகே, லூகாஸின் ஆன்மா அவனது உடலில் புகுகிறது. அதற்குப் பிறகு நடைபெறும் பரபர சம்பவங்கள்தான் கதை.  இந்த காமிக்ஸ் கதையில் சுவாரசியம் என்னவென்றால், ஃபிரே பிளாக் உடலில் லூகாஸ் புகுந்தபிறகு செய்யும் நகைச்சுவைதான். பள்ளி செல்லும் சம்பவங்களில் இந்த நகைச்சுவை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக, ஃபிரே பிளாக் தனது பெண் ஆசிரியை மீது காதல் கொள்ளும் சம்பவம். ஃபிரே பிளாக், வகுப்பில் உள்ள இசபெல்லா என்ற நன

அத்தையின் மந்திரி பதவியை அழித்து அவரின் மகளைக் கரம் பிடிக்கும் மருமகனின் கதை!

படம்
  பொப்பிலி ராஜா வெங்கடேஷ்,திவ்ய பாரதி  இயக்கம் பி கோபால்,  காட்டுக்குள் அம்மா, தாத்தாவுடன் சிறுவன் இருபது ஆண்டுகளாக வளர்ந்து பெரிதாகிறான். அவன்தான் பொப்பிலி ராஜா. அங்கு வரும் அமைச்சரின் பெண்ணுடன் நேசம் பிறக்கிறது. ஆனால் அமைச்சரோ, ராஜாவின் அம்மா, தாத்தாவை கட்டி வைத்து அடிக்கிறாள். காவல்துறை மூலம் சித்திரவதை செய்ய முயல்கிறாள். ஏன் அப்படி செய்கிறாள் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  தேர்தல் அரசியலுக்காக கொலை செய்யப்பட்டு, குணநலன்கள் களங்கப்படுத்தப்பட்டு காட்டுக்கு செல்ல நேருகிற சூழல் ராஜாவின் அம்மாவுக்கு நேருகிறது. ஆனால், அவர் பழிவாங்குவதை முக்கியமாக கருதவில்லை. தனது மகனை அவன் இயல்புப்படி வளர்க்கிறார். அவன் அரசு வனத்துறையோடுசேர்ந்து வேலை செய்கிறான். இந்த நேரத்தில் அங்கு வரும் அமைச்சரின் மகளை சந்திக்கிறான். இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டிக்கொள்கிறது. பிறகு இருவரும் மெல்ல மனதால் நெருங்கி வருகிறார்கள். அவன் யார் என அடையாளம் தேடும்போது, அவளின் அப்பா, அவன் உன் மாமன் முறைதான். கட்டிக்கொள்ளலாம் என வெளிப்படையாக சொல்கிறார். அதாவது, மனைவியின் தம்பி மகன்.  பழிவாங்குதலை தொடங்க வேண்டாமா? மந்திர

உலகை மேம்படுத்தும் முக்கியமான போராளிகள், செயல்பாட்டாளர்கள் - டைம் 100

படம்
  ஷாய் சுரூய் 26 பழங்குடி நிலங்களைக் காப்பவர் சுரூய் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். பால்டர் சுரூய் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். சட்டம் படித்துள்ளார். தனது படிப்பை அடிப்படையாக வைத்து பாரிஸ் ஒப்பந்தத்தை அனுசரிக்காத தனது நாட்டு அரசு மீதே வழக்கு போட்டுள்ள தைரியசாலி. ரோண்டோனியாவில் இளைஞர்களுக்கான அமைப்பை நிறுவி சூழலைக் காக்க பாடுபட்டு வருகிறார். மேலும் முப்பது ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்காக இயங்கும் அமைப்பையும் ஆதரித்து வருகிறார். ஜிபிஎஸ், கேமரா ஆகியவற்றை இணைத்து தனது பழங்குடி நிலத்தை அரசிடமிருந்தும், பெருநிறுவனங்களிடமிருந்தும் காக்க முயன்று வருகிறார். “நாம் பூமித்தாயின் பிள்ளைகள். உலகம் அழிவதற்கு எதிராக பல்வேறு தீர்வுகளை கண்டுபிடித்து அதை கூறிவருகிறோம்” என்றார். அர்மானி சையத்   பூமெஸா நந்திதா நந்திதா வெங்கடேசன், 33 பூமெஸா சிலே, 33 நோயாளிகளுக்காக போராடும் போராளிகள் மேற்சொன்ன இருவருமே காசநோயில் விழுந்து எழுந்தவர்கள்தான். அதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்க விளைவால் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டனர். இதற்கு சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்துகளில் உள்ள நச்சுத்தன்மையே

ஆபத்து நாமிருக்கும் சூழல்களால் ஏற்படுகிறதே ஒழிய விலங்குகளால் அல்ல! - காட்டுயிர் ஒளிப்பதிவாளர் கார்டன் புச்சனன்

படம்
  கார்டன் புச்சனன் காட்டுயிர் திரைப்படக்கலைஞரான கார்டன் புச்சனன், கடந்த முப்பது ஆண்டுகளாக உலகின் பல்வேறு கண்டங்களில் அலைந்து திரிந்துள்ளார். சைபீரியாவில் பனிக்கரடிகளை தேடிச்செல்வது, கலாஹரி பாலைவனத்தில் சீட்டாக்களை பின்தொடர்வது என அவரது பணிகளுக்கு எப்போதும் குறைவில்லை. மலையில் ஏறுவது, காடுகளில் நடப்பது என பல இடங்களுக்கு செல்வதில் நிறைய திட்டமிடல்கள் இருந்தாலும் எவையும் நினைத்தது போல நடக்காது. விலங்குகளை படமாக்குவது என்பது எளிதல்ல. அதற்கு காத்திருக்கவேண்டும். மனமும், உடலும் ஒருவருக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இப்பணி சாத்தியமாகும். பணம் முக்கியம் தேசியப்பூங்காவிற்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், செலவழிப்பதில் கவனம் வேண்டும். தேசியப்பூங்காவிற்கு காசு கட்டியபிறகு உள்ளே செல்லவேண்டும். ஒளிப்படக்கருவிகளை எடுத்துச்செல்லவேண்டும். விலங்குகளை சரியான கோணத்தில் படம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும். நீங்கள் பணம் செலவழிக்கும் நேரத்தில், விலங்குகளை சரியாக படம்பிடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது. எனது திட்டங்களில் பெரும்பாலும் அதிர்ஷ்டவசமாக நன்றாக நிறைவேறியுள்ளன. உடற்பயிற்சி காட்டுக்

சுற்றுலா போன இடத்தில் காணாமல் போன குழந்தை

படம்
  அமெரிக்காவில் இடா மாகாணத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவம். 2015ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி டியோர் கன்ஸ் என்ற இரண்டு வயது குழந்தை காணாமல் போகிறது. என்னவானது என்பதை இன்றுவரைக்கும் க்ளூ ஏதாவது கிடைக்குமா என காவல்துறை தேடி வருகிறது. ஆனால் எதிர்பார்த்த எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம். சால்மன் சாலிஸ் தேசிய வனப்பகுதிக்கு அருகில் ஜெசிகா மிட்செல் அவரது கணவர் டியோர் கன்ஸ் சீனியர் ஆகியோர் சுற்றுலாவுக்காக வந்திருந்தனர். டியோர் கன்ஸ் சீனியரின் தாத்தாவும் அவரது நண்பருடன் அங்கே இருந்தார். அவரிடம்தான் குழந்தை டியோர் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவர் தனது நண்பருடன் சேர்ந்து மீன் பிடிப்பதில் தீவிரமாக இருக்கும்போது, லிட்டில் மேன் எனும் குழந்தை டியோர் காணாமல் போயிருந்தது. குழந்தையின் பெற்றோர் அருகில் இருந்த பாருக்கு மதுபானம் அருந்த சென்றிருந்தனர். குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். வந்து பார்த்தால் ஒருவருக்கொருவர் நீ பார்த்தாயா என கைகாட்டிக்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி போல நின்றார்களே ஒழிய பதில் கிடைக்கவில்லை. இருநூறுக்கும் மேலான காவல்துறையினர், தன்னார்வலர்கள் இரண்டு கி.மீ. தொ

தெரிஞ்சுக்கோ - கரடிகள்

படம்
  தெரிஞ்சுக்கோ – பழுப்பு நிற கரடிகள்   கரடிகள் தனிமையாக வாழ்பவை. மரம் ஏறும் திறன் பெற்றவை. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர பிற பகுதிகளில் கரடிகளைப் பார்க்கலாம். கரடிகளில் 8 இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கரடி இனம் ஒன்பதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கரடி இனம் அழிந்து போனது. துருவக்கரடிகள் வேட்டையாடுவதில் வெற்றிபெறும் சதவீதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு. தென் அமெரிக்காவில் வாழும் ஸ்பெக்டேக்ல்டு பியர் எனும் கரடி இனம், பழம், தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறது. இதன் உணவில் 5 சதவீதம் மட்டுமே இறைச்சி உண்டு. ஜெயண்ட் பாண்டா, தனது உடல் எடையில் 38 சதவீத அளவுக்கு மூங்கில்களை உண்கிறது. இப்படி சாப்பிடுவதை ஒரு நாளில் 10-16 மணிநேரம் செய்கிறது. உலகில் தற்போது 26 ஆயிரம் துருவக்கரடிகள்தான் உயிரோடு உள்ளன. ஸ்லாத் கரடி இனம், இந்தியா, இலங்கையில் வாழ்கிறது. இந்த கரடி இனம், தனது குட்டிகளை ஒன்பது மாதம் வரையில் தனது முதுகில் சுமந்து பராமரிக்கிறது. சன் பியர் எனும் கரடி இனம், 25 செ.மீ நீள நாக்கைக் கொண்டது. எதற்கு இந்தளவு நீளமான நாக்கு? தேன்கூட்டிலிருந்து தேனை

தெரிஞ்சுக்கோ - பூனைக்குடும்பம்

படம்
  தெரிஞ்சுக்கோ - பூனைக்குடும்பம் காட்டுவிலங்குகளில் அதாவது நிலத்தில் வேட்டையாடுவதில் சிறந்தவை பூனைக்குடும்ப விலங்குகள்தான். சிங்கம், புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, சீட்டா ஆகியவை வலிமையும் அபாரமான வேட்டைத்திறனும் கொண்டவை. காட்டில் வாழும் சிங்கத்தின் ஆயுள் 13-15 ஆண்டுகளாகும். சிங்கத்தின் கர்ஜனை முழக்கம் 5-8 கி.மீ தொலைவு வரை கேட்கும்.   பனிச்சிறுத்தை, 5,859 மீட்டர் உயரத்தில் வாழக்கூடிய திறன் பெற்றது. இரவில் வேட்டையாடும் புலியின கண்பார்வை திறன், மனிதர்களை விட ஆறுமடங்கு ஆற்றல் வாய்ந்தது. அமெரிக்காவில் வாழும் பூனை குடும்ப விலங்குகளில் பெரியது ஜாகுவார்தான். 1.7 மீட்டர் நீளத்தில், 120 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இரவில் உணவுக்காக மட்டும் ஜாகுவார் பத்து கி.மீ. தொலைவுக்கு பயணிக்கிறது. ஜாகுவாரின் குட்டிகள் பிறக்கையில் கண்பார்வை இல்லாமல் பிறந்து, பதினான்கு நாட்களுக்குப் பிறகு பார்க்கும் திறன் பெறுகின்றன. பூனை குடும்ப விலங்குகளில் இது பொதுவான அம்சம். புலிகளில் ஒன்பது துணைப்பிரிவுகள் உள்ளன. பலி, காஸ்பியன், ஜாவன் ஆகிய பிரிவுகள் ஏறத்தாழ அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் ப

உலகின் நீளமான பாம்புகள்

படம்
  உலகின் நீளமான பாம்புகள்   ரெட்டிகுலேட்டட் பைத்தான் அறிவியல் பெயர் - மலாயோபைத்தான் ரெட்டிகுலாடஸ் காணப்படும் இடம் -தெற்காசியா பத்து மீட்டர் நீளம் கொண்டது. எடை 140 கிலோவுக்கும் அதிகம். பறவை, மான், பிற பாலூட்டிகளை உடலை இறுக்கி எலும்புகளை நொறுக்கி உண்கிறது. க்ரீன் அனகோண்டா அறிவியல் பெயர் - யுனாடெக்டெஸ் முரினஸ் கா.இ - தென் அமெரிக்காவின் வடக்குப்பகுதி 8-9 மீட்டர் நீளம் கொண்டது. இவ்வகை பாம்பு முட்டையிடாமல் குட்டிகளை நேரடியாக பிரசவிக்கிறது. அமேதிஸ்டைன் பைத்தான் மோரேலியா அமேதிஸ்டியானா இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ் 8.5 மீட்டர் நீளம் கொண்டது. இதன் செதில்கள் சூரிய வெளிச்சத்தில் பார்க்கும்போது ரோஸ் நிறத்தில் மின்னும். ஆப்பிரிக்கன் ராக் பைத்தான் பைத்தான் செபே சப் சகாரா ஆப்பிரிக்கா 7 மீட்டர் நீளம் கொண்ட ஆக்ரோஷ தாக்குதல் நடத்தும் பாம்பு. பெரிய பாலூட்டிகளை வேட்டையாடுகிறது. பர்மீஸ் பைத்தான் பைத்தான் பைவிட்டாடஸ் தெற்காசியா, இந்தியா, சீனா 5.74 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மலைப்பாம்பு அதைவிட மூன்று மடங்கு பெரிய விலங்குகளைக் கூட உண்ணும்

சூழல் போராட்டங்களால் பாதுகாக்கப்படும் இயற்கை சூழல்!

படம்
  புத்துயிர்ப்பு தொழில்வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுவது இடையறாமல் நடந்து வருகிறது. இதோடு ஒப்பிடும்போது, மரக்கன்றுகளை நடும் செயல் சற்றுவேகம் குறைவானதாகவே உள்ளது. காடுகள் வளர்க்கப்பட்டால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவு குறையும். மண் அரிப்பு மெல்ல குறையும். இதெல்லாம் தாண்டி இயற்கை வளம் சீரானால் வேலைவாய்ப்புகள் கூடும். மரங்கள், கார்பனை உறிஞ்சி தனது வேர்ப்பகுதியில் சேமிக்கிறது. 20-30 சதவீத அளவுக்கு மரத்தின் உயிரியல் பகுதி, கார்பனை உறிஞ்சும் ஸ்பான்ஞ்ச் போல செயல்படுகிறது. இறந்த அழுகிய மரத்தின் வேர்கள் கார்பனை வெளியிடுகின்றன. ஒளிச்சேர்க்கை செய்யும் மரங்கள், கழிவுப்பொருளாக ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. காடுகள் அழிந்தாலும் அதனை செயற்கையாக முறையில் மரக்கன்றுகளை நட்டு நகர்ப்புறங்களில் உருவாக்க முயல்கிறார்கள். இந்தவகையில் நகர்ப்புற கட்டுமானங்களுக்கு புகழ்பெற்ற சிங்கப்பூரில் கூட செயற்கையான பசுமைப்பரப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இயற்கை சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டால் அதை மறுகட்டுமானம் செய்வதற்கு சிறிது காலம் தேவை. மனிதர்கள் தங்களது தலையீட்டாலும், மாசுபாடுகளை உருவாக்குவதாலும் இயற்கை தனது

இருளர்கள் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் என்பதால், பொதுசமூகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது! - ஸாய் ஒயிட்டேகர்

படம்
  எழுத்தாளர் ஸாய் ஒயிட்டேகர் டெர்மைட் ஃபிரை என்ற நாவலை ஸாய் ஒயிட்டேகர் எழுதியிருக்கிறார். சிறுமி, அவளின் குடும்பம் சார்ந்த கதையில் இருளர் இனத்தின் வாழ்க்கை, அவர்களின் பிரச்னைகள் பற்றி பேசியிருக்கிறார். இருளர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்? பாம்புகளைப் பிடிப்பவர்கள், தேள்கள் வாழும் இடத்தில் குடிசைகளைக் கட்டி வாழ்பவர்கள். கரையான்களை வறுத்து சாப்பிடுபவர்கள். மருத்துவத் தாவரங்கள் பற்றி அகமும் புறமும் அறிந்தவர்கள். பறவைகளின் மொழியை அறிந்து பேசுபவர்கள், மாந்திரீகம் கற்றவர்கள். இவைதான். நூலில் நாம் அறியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் இருளர் குடும்பத்தின் கதை, நாவலில் கூறப்படுகிறது. தேனீ என்ற சிறுமியின் குடும்பம் அங்கு, மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டம் வழியாக இருளர்கள் காட்டுக்குள் பாம்புகளை பிடித்து அதன் தோலை விற்பது தடை செய்யப்பட்டது. அவர்களின் முக்கிய வாழ்வாதாரம் தடைபட்டபிறகு, வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நாவல் மையமாக கொண்டுள்ளது. இருளர்கள் தங்கள் பொருட்களை பேருந்துகளில் கொண்டு செல்ல

இயற்கைப் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த வலிமையான அரசியல் தலைமை தேவை - பெலிண்டா ரைட் , சூழலியலாளர்

படம்
  பெலிண்டா ரைட், சூழலியலாளர் பெலிண்டா ரைட், சூழலியலாளர்  பெலிண்டா ரைட் தலைவர், வைல்ட்லைஃப் புரடக்‌ஷன் சொசைட்டி ஆஃப் இந்தியா இந்தியா, புலிகள் பாதுகாப்பில்,   50 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? இத்தனை ஆண்டுகள் கழித்தும் காடுகள் அழியாமல் இருக்கின்றன. அதில் வாழ்ந்த புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்ற செய்தி அதிசயமாகவே உள்ளது. புலிகளின் வாழிடத்திற்கு அருகில் வாழ்ந்து வந்த மக்களின் சகிப்புத்தன்மை, புலிப்பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பான அணுகுமுறை ஆகியவற்றை பற்றி இந்தியா நிச்சயமாக பெருமைப்படலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்தியா மனிதர் விலங்கு மோதல் என்ற பெரிய சவாலை சந்திக்கவேண்டியுள்ளது. மக்களிடம், காடுகளில் உள்ள புலிகளைப் பாதுகாப்பதில் முன்னர் காட்டிய சகிப்புத்தன்மை மெல்ல மறைந்து வருகிறது. அரசின் எரிவாயுவிற்கான மானியம் குறையும்போது காட்டில் உள்ள விறகுகளைத் தேடி மக்கள் வருவார்கள், நகர கட்டுமானத்திற்கான சட்டவிரோத மணல் குவாரிகள், காட்டு விலங்குகளைத் தடுக்கும் சட்டவிரோத மின்சார வேலிகள் ஆகியவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். காட்டுத்தீ மற்றும் காட்டில்