ஆபத்து நாமிருக்கும் சூழல்களால் ஏற்படுகிறதே ஒழிய விலங்குகளால் அல்ல! - காட்டுயிர் ஒளிப்பதிவாளர் கார்டன் புச்சனன்

 






கார்டன் புச்சனன்



காட்டுயிர் திரைப்படக்கலைஞரான கார்டன் புச்சனன், கடந்த முப்பது ஆண்டுகளாக உலகின் பல்வேறு கண்டங்களில் அலைந்து திரிந்துள்ளார். சைபீரியாவில் பனிக்கரடிகளை தேடிச்செல்வது, கலாஹரி பாலைவனத்தில் சீட்டாக்களை பின்தொடர்வது என அவரது பணிகளுக்கு எப்போதும் குறைவில்லை.

மலையில் ஏறுவது, காடுகளில் நடப்பது என பல இடங்களுக்கு செல்வதில் நிறைய திட்டமிடல்கள் இருந்தாலும் எவையும் நினைத்தது போல நடக்காது. விலங்குகளை படமாக்குவது என்பது எளிதல்ல. அதற்கு காத்திருக்கவேண்டும். மனமும், உடலும் ஒருவருக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இப்பணி சாத்தியமாகும்.

பணம் முக்கியம்

தேசியப்பூங்காவிற்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், செலவழிப்பதில் கவனம் வேண்டும். தேசியப்பூங்காவிற்கு காசு கட்டியபிறகு உள்ளே செல்லவேண்டும். ஒளிப்படக்கருவிகளை எடுத்துச்செல்லவேண்டும். விலங்குகளை சரியான கோணத்தில் படம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும். நீங்கள் பணம் செலவழிக்கும் நேரத்தில், விலங்குகளை சரியாக படம்பிடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது. எனது திட்டங்களில் பெரும்பாலும் அதிர்ஷ்டவசமாக நன்றாக நிறைவேறியுள்ளன.

உடற்பயிற்சி

காட்டுக்குள் சென்று ஒளிப்பதிவு செய்யும் அனைத்து நேரங்களிலும் உடற்பயிற்சி செய்ய நேரமோ ஆற்றலோ கிடைக்காது. ஒருமுறை ஜிம்பாவேயில் உள்ள காட்டுக்குள் சென்றபோது, பதினான்கு மணிநேரம் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியிருந்தது. இதில் உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை, முழுக்க இழந்துவிட்டேன். அந்த பயணத்திற்கு பிறகு உடல் முழுக்க தனது வடிவத்தை இழந்திருந்த்து. 

உடலின் தகுதி

வெவ்வேறு இடங்களுக்கு நீங்கள் செல்லும்போது உடல் அதற்கேற்ப தனது அமைப்பை செயல்பாட்டை மாற்றிக்கொள்ளும், சமாளிக்க முயலும். உணவு, உடற்பயிற்சியை நான் அதற்கேற்ப மாற்றிக்கொள்கிறேன். எங்கு சென்றாலும் கைகளில் தூக்கி பயிற்சி செய்வதற்கான எடைக்கல்லை தூக்கிச்செல்கிறேன். ஒருவாரம் இரண்டுவாரம் என உடனே மாற்றம் தெரியாவிட்டாலும் உடலுக்குள் தாங்கும் திறன் உருவாவது உங்களுக்கு தெரிய வரும். பேக் ஸ்குவாட், பென்ச் பிரஸ், பென்ட் ஓவர் ரோ, ஓவர்ஹெட் பிரஸ், டெட் லிஃப்ட் ஆகிய பயிற்சிகளை நான் செய்கிறேன். 

பயிற்சி

நான் வலிமையாகவேண்டும் கச்சிதமான உடல் அமைப்பை பெற்றிருக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் பலருக்கும் இறுதி லட்சியமாக மாறிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை உடலை வலுவாக உடற்பயிற்சி செய்து வைத்துக்கொள்வது முக்கியம். உடற்பயிற்சி செய்வது உடல் மற்றும் மனதளவில் நேர்மறையான மாறுதல்களை உருவாக்கும். நான் செல்லும் பயணங்கள் பெரும்பாலும் 70 சதவீதம் மனநலனை கடுமையாக சோதிப்பவை. போர்னியா சென்ற பயணத்தில் வழிகாட்டி ஒருவரைச் சந்தித்தேன். பயணம் பற்றி கேட்டேன். அவர், இதெல்லாம் மனநிலை சார்ந்ததுதான். உங்களால் தூங்கி எழும்போது முடியும் என்றால் முடியும் இல்லை என்றால் இல்லை என்று கூறினார்.

எடையும் மனமும்

கலாஹரி என்ற இடத்திற்கு சீட்டாக்களை படம்பிடிக்க சென்றபோது, பெரும்பாலான நேரங்களில் ட்ரைபாட், கேமரா, பை ஆகியவற்றை நான் தோளில் சுமந்துகொண்டேதான் இருந்தேன். அனுபவத்தின் மீது கவனம் இருந்த காரணத்தால் எனது தோளில் இருந்த எடை பற்றி பெரிய கவனம் ஏதுமில்லை. தோளில் இருந்த சுமை அதிகம் என்றாலும், அந்த அனுபவம் மறக்கமுடியாததாக இருந்த காரணத்தால் சிரமங்களை பொருட்படுத்தவில்லை.

ஆபத்தை எதிர்கொண்டால்…

விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என நிறையப்பேர் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. நாம் உள்ள சூழ்நிலைதான் ஆபத்தானது. நான் விலங்குகளை படம்பிடிக்கும்போது இளமையில் எதையும் யோசிக்காமல் சில செயல்களை செய்திருக்கிறேன். அதனால், யானை, கரடி ஆகியவற்றால் துரத்தப்பட்டிருக்கிறேன். அந்த 30 ஆண்டு அனுபவங்களிலிருந்து எதைச் செய்யக்கூடாது என தெரிந்துகொண்டிருக்கிறேன்.

நல்ல பயணம்

உங்களோடு நல்லெண்ணம் கொண்ட மக்கள் குழு இருப்பதை இப்படி சிறந்த பயணம் என்று கூறலாம். ஆர்க்டிக் பகுதிக்கு சென்று துருவக்கரடிகளை படமாக்கியது, பனி ஓநாய்களை படமெடுத்த அனுபவங்களை இந்த வகையில் வரிசைப்படுத்தி கூறலாம்.

அடையாளம்

துருவக்கரடிகளை பார்ப்பதே காலநிலை மாற்றத்தின் விளைவுக்கான அடையாளம். அண்மையில் ஸ்காட்லாந்திற்கு சென்றிருந்தபோது அங்கு நிலவிய வெப்பம் பதிமூன்று டிகிரி செல்சியஸாக இருந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு சென்றபோது இருந்த பல்வேறு பருவமழைக்காடுகள் இன்று பெருமளவு அழிந்துவிட்டன.

உண்மையில் உங்கள் வேலை சுமையாக இல்லை. ஆனால், இயற்கையான இடங்கள்தான் சிக்கலானவையாக மாறி வருகின்றன. ஒருமுறை மூன்று கரடி குட்டிகளை காட்டில் விட்டுவிட்டு வந்தோம். அவை காட்டின் சவால்களை சந்தித்து வாழவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

சொல்ல நினைப்பது

நான் எதையும் சாதித்து விட்டதாக நினைக்கவில்லை. சில நேரங்களில், வெளியே போ, சூரிய வெளிச்சத்தைப் பெறு. மக்களிடம் பேசு என சொல்லிக்கொள்வேன். நான் இயற்கையோடு அதிக நேரம் செலவழிக்கிறேன். நாம் இயற்கையான சூழலில் இருக்கும்போது நம் பிரச்னைக்கான அனைத்து தீர்வுகளும் கிடைக்கும் என நம்புகிறேன். அங்குதான் மனித இனமே பரிணாமவளர்ச்சி பெற்றது. இயற்கை உலகத்துடன் மனிதர்கள் ஒன்றாக இருக்கவேண்டும்.

சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, மக்களோடு உரையாடுவது என்பதே மன அழுத்தம் போக்கும் வழி. இல்லையெனில் மன அழுத்தம் உங்களை சுனாமி போல உள்ளே சுருட்டி இழுத்து சென்றுவிடும். அதை கவனமாக எதிர்கொள்ளவேண்டும்.

கடினம்

காட்டுக்குள் சென்று விலங்குகளோடு நேரத்தை செலவிடுவது கடினமாக இல்லை. திரும்ப யதார்த்த உலகிற்கு திரும்பி மின்னஞ்சல்களை பார்ப்பது, போனில் பிறருக்கு பதில் சொல்லுவதுதான் கடினமாக இருக்கிறது. நான் தந்தையாக இருப்பதால், வேலை முடிந்தபிறகு வந்து பிள்ளைகளை பார்ப்பதும், அவர்களுக்கான தேவைகளை நிறைவு செய்வதும் மகிழ்ச்சியான ஒன்றுதான். அப்படித்தான் வேலைகளை பார்க்கிறேன்.

மென்ஸ் ஃபிட்னஸ்

கருத்துகள்