தன்னை எதிர்ப்பவர்களை பல்வேறு நூதன வழிகளில் ரஷ்யா தண்டிக்கிறது? - என்னென்ன வழிகள் என அறிவோமா?
எதிர்த்து
நின்றால் மரணம் நிச்சயம்
ரஷ்யா எதிரிகளை
தாக்கும் விதம் என்பது மாறுபட்டது. நோவிசோக், பொலோனியம் என பல்வேறு வேதிப்பொருட்களை
பயன்படுத்தி தன்னை விமர்சிக்கும் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை
கொல்வது ரஷ்ய அரசின் வழக்கம். அதாவது இருபத்து மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவை ஆண்டு வரும்
‘வலிமையான தலைவர்’ புதின் அணுகுமுறை இதுதான்.
அண்மையில்
ரஷ்யாவின் ராணுவ கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி ஜெட் விமானத்தில் வானில் இருக்கும்போது
கொல்லப்பட்டார். இந்த டெக்னிக்கை புதிதாக கூட பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதைப்பற்றியெல்லாம்
கேள்வி கேட்டால், கிரெம்ளினில் எந்த பதிலும் வராது. அவையெல்லாம் வதந்தி, உண்மையல்ல
என்று கூறுவார்கள். ஆனால் ரஷ்யாவில் உள்நாட்டில் நடக்கும் விஷயங்கள், சொல்பவை எல்லாமே அரசியல் ரீதியாக அந்த அரசின் கூற்றுக்கு
மாறாக இருக்கின்றன.
அரசியல்வாதிகளுக்கு
விஷம் வைத்துக்கொல்வது சோவியத் காலம்தொட்டே நடந்து வருகிறது. ரஷ்ய விஞ்ஞானிகளின் விஷயம்
என்னவென்றால், வாசனை இல்லாத நிறமில்லாத விஷத்தை கண்டுபிடித்து அதை மேம்படுத்தி வருகிறார்கள்.
இதனால் ஒருவரை எளிதாக கொல்ல முடியும். யார் கொன்றார்கள் என நிரூபிப்பது கடினம். பாதிக்கப்பட்டவரை
காப்பாற்றுவது மிக கடினம்.
அரசியல்கட்சி தலைவரான அலெக்ஸாண்டர் லிட்வினென்கோவுக்கு
விஷத்தாக்குதல் நடத்தப்பட்டது. 2006ஆம் ஆண்டு லண்டனில் அவருக்கு உடலில் செலுத்தப்பட்ட
விஷம் பொலோனியம் 210 என கண்டறிந்தனர். அவர் இறப்பதற்கு முன்னரே, ரஷ்யாவின் எஃப் எஸ்பி
விஷங்களை தயாரிப்பதற்கான ஆய்வகங்களை மூடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது என தகவல் கூறிவிட்டார்.
எனவே பிரிட்டன் இது பற்றி விசாரணை செய்ததில் ரஷ்ய உளவாளிகள் அதிபர் புதினின் உத்தரவுப்படி
அலெக்ஸாண்டரை தாக்கியுள்ளனர் என அறிந்துகொண்டது.
ரஷ்யாவின்
முன்னாள் உளவுத்துறை அதிகாரி செர்ஜெய் ஸ்கிரிபால், பிரிட்டனுக்கும் சகாயமாக மாறி இரட்டை
ஏஜெண்டாக வேலை செய்தார். இதை ரஷ்யா அறிந்ததும் அவர் மீது நோவிசோக் என்ற விஷத்தாக்குதல்
நடத்தப்பட்டது. அதிபர் புதின் ஸ்கிரிபாலை தேசதுரோகி, குப்பை என்று அழைத்தார். எதை வேண்டுமானாலும்
மன்னிக்கலாம். ஸ்கிரிபால் செய்த தேச துரோகத்தை மன்னிக்க முடியாது என்று கூறினார். இந்த இரண்டு சம்பவங்களில் ரஷ்யாவின் குரூரமான விஷத்தாக்குதல்கள்
உலகளவில் வெளியே தெரிந்தன.
2020ஆம் ஆண்டு
அலெக்ஸி நாவல்னி என்ற எதிர்க்கட்சி தலைவர் சிறையில் அடைக்கப்பட்டார். சைபீரியாவில்
இருந்து மாஸ்கோவுக்கு வந்தவரின் உடல்நலம் சீராக இல்லை. அவரை ஜெர்மனிக்கு அனுப்பி மருத்துவம்
பார்த்ததில், உடலில் நோவிசோக் என்ற விஷம் இருப்பது தெரிய வந்தது. இதில் எட்டு உளவுத்துறை அதிகாரிகள் பங்களிப்பு இருப்பது
தெரிய வந்தது. இதில் ஒருவர் தனது விஷத்தாக்குதல்
செயலை ஒப்புக்கொண்டுவிட்டார்.
துப்பாக்கிச்சூடு
2006ஆம் ஆண்டு,
அன்னா பொலிட்கோவ்ஸ்காயா என்ற பத்திரிகையாளர் அவரது பிளாட்டிற்கு முன்னால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் ரஷ்ய அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி விலாவரியாக கட்டுரைகளை எழுதி தள்ளி வந்தவர்.
மாஸ்கோவில் உள்ள வீட்டுக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டவருக்கு, இரு பிள்ளைகள் உண்டு.
அப்போதுதான் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று வந்தவரை, ரஷ்ய அதிபர் புதினின் ஆதரவு
பெற்ற கூலிப்படை கொன்றது. புதினின் 54 வது பிறந்தநாளன்று பத்திரிகையாளர் அன்னா கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் ஐந்து பேர் குற்றம்சாட்டப்பட்டனர். அதில் ஒருவர் முன்னாள் காவல்துறை
அதிகாரியும் கூட.
2015ஆம் ஆண்டு
போரிஸ் நெம்ட்ஸ்வோவ் என்ற அரசியல்வாதி அடையாளம் தெரியாத ஒருவரால் நான்கு முறை சுடப்பட்டார்.
இவர் , தலையின் பின்புறமிருந்து துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டிருந்தன. இதுபற்றிய
விசாரணையில் இவரை கொல்வதற்கு ஓராண்டுகளாக உளவுத்துறையான எஃப்எஸ்பி திட்டமிட்டிருந்தது
தெரிய வந்தது.
மர்ம மரணங்கள்
2013ஆம் ஆண்டு
இங்கிலாந்தின் அஸ்காட்டைச் சேர்ந்த போரிஸ் பெரிஸோவ்ஸ்கி என்பவர் தனது வீட்டு குளியலறையில்
தூக்குப்போட்டு இறந்துகிடந்தார். பிணக்கூராய்வு சோதனையில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை
என்று தெரிய வந்தது. இவர் ரஷ்யாவில் இருந்தபோது அதிபர் புதினின் அரசியல் செயல்பாடுகளை
கடுமையாக விமர்சித்து வந்தவர். பிறகு, இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்து வந்து முன்னர்
போலவே விமர்சனங்களை தொடர்ந்து வந்திருக்கிறார்.
இவரோடு தொடர்புகொண்ட
பத்ரி படார்கட்ஸ்சிஸ்வில், நிக்கோலாய் குளூஸ்கோவ், யூரி கோளுபேவ் ஆகியோர் லண்டனில்
மர்மமான முறமையில் இறந்து கிடந்தனர். எப்படி இறந்தனர் என்பது யாருக்கும் தெரியவில்லை.
Pjotr sauer
The guardian weekly
pinterest
கருத்துகள்
கருத்துரையிடுக