இடுகைகள்

களைத்தாவரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

களைத் தாவரங்களை கண்டறியும் நாயின் மோப்பசக்தி!

படம்
  அமெரிக்காவில் அரிசோனா தொடங்கி வியோமிங்   வரையில ‘டையர் வோட்’   என்ற ஆக்கிரமிப்பு தாவரம்   பரவி வருகிறது. முழங்கால் அளவு உயரத்தில் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டது. இந்த தாவரம் வேகமாக வளர்ந்து, புதிய செடிகளை உருவாக்குவதால் அங்கு வளர்ந்து வந்த மரபான செடிகள் அழிந்து மறைந்தன.   இதைக் கட்டுப்படுத்த அரசு முயன்றது. அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே, செடியை துல்லியமாக கண்டறிய இரண்டு நாய்களை பயிற்றுவித்து பயன்படுத்துகிறார்கள். பொதுவாக, நாய்களை இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்துவது கடினமானது. ஏறத்தாழ ஆயிரம் நாய்களில் ஒன்றுதான் களைத் தாவரத்தை எளிதாக கண்டறியும் திறன்பெற்றதாக உள்ளது. மனிதர்கள் கவனிக்காமல் விட்ட தாவரத்தை நாய் தவறவிடுவதேயில்லை. ‘டையர் வோட்’ என்ற களைத் தாவரம் ரஷ்யாவை பூர்விகமாக கொண்டது. இத்தாவரத்தை அகற்றும் பணி 2011ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. மனிதர்களால் கண்டறிய முடியாத விஷயங்களை நாய் மோப்பத்திறனால் கண்டுபிடித்து வருகிறது.வனவிலங்கு காட்சி சாலையில் உள்ள   நரிக்குட்டிகள், வெடிமருந்து, பண்ணை விலங்குகளை அழிக்கும் பாக்டீரியா, களைத்தாவரங்கள் என கூறிக்கொண்டே ச