இடுகைகள்

கிரிஸ்பிஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை செம்மை செய்தாலே நோய்களை குணப்படுத்தலாம்! - ஜெனிஃபர் டூட்னா

படம்
  நேர்காணல் ஜெனிஃபர் டூட்னா, பயோகெமிஸ்ட் எனக்கு நீங்கள் செய்யும் புரோஜெக்ட் மீது ஆர்வமாக உள்ளது. மனிதர்களின் வயிற்றில் மாறுதல் செய்யப்பட்ட பாக்டீரியாக்களை உருவாக்க முயன்று வருகிறீர்கள். நான் இதை முதலில் கேள்விப்பட்டபோது அது மிகவும் சிக்கலான முறை என்று நினைத்தேன். மனித உடலில் உள்ள செல்களை விட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகம். முதலில் நுண்ணுயிரிகளை ஆய்வகத்தில் உருவாக்கி வளர்த்து ஆய்வு செய்து வந்தனர். ஆனால் அதன்பிறகுதன் அவை பல்வேறு இடங்களிலும் உருவாகி வளர்வது தெரிய வந்தது. நமது உடலில் உள்ள நுண்ணுயிரிகளை பற்றி மட்டுமே ஆய்வாளர்கள் கவனம் செலுத்தினர். அவற்றின் உலகம் சற்று வித்தியாசமானது.  செரிமானம், உடல்பருமன், மன அழுத்தம், பதற்றகுறைபாடு என ஏராளமான சிக்கல்களுக்கு நுண்ணுயிரிகளை பயன்படுத்தலாம் என யோசனை கூறப்படுகிறது. நீங்கள் குழந்தைக்கு வந்த ஆஸ்துமாவை எப்படி குணப்படுத்தினீர்கள்? ஆஸ்துமா என்பது முக்கியமான நோய். நாங்கள் செய்யும் சிகிச்சை, யோசனை என இரண்டு விஷயங்களிலும் மேம்பாடு வேண்டுமென நினைத்தோம். அமெரிக்காவின் யுசி சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த சூ லின்ச், நோயாளியின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரி ஒன

கிரிஸ்பிஆர் முறையை வணிகப்படுத்த முடியும் - ஜெனிஃபர் டவுட்னா

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளர், ஜெனிஃபர் டவுட்னா. 2020ஆம் ஆண்டு மரபணு செம்மைப்படுத்தல் மேம்பாட்டிற்காக (Genome Editing) இம்மானுவேல் சார்பென்டியருடன்  சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்.    வால்ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த சிக்ஸ்த் ஸ்ட்ரீட் என்ற நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்பணியை நீங்கள் ஏற்றது ஏன்? சிக்ஸ்த் ஸ்ட்ரீட் நிறுவனத்தில், சரியான குழுவை அடையாளம் கண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த நிறுவனத்தின் எந்திரக் கற்றல் நுட்பம் மூலம் கிரிஸ்பிஆர் தகவல்களை ஆராய முடியும். எந்திரக்கற்றலும், கிரிஸ்பிஆர் முறையும் ஒன்றாக சேரும்போது ஆற்றல் கொண்டதாக மாறும். இதன் மூலம் மரபணு நோய்களை அறிந்து சிகிச்சை செய்யலாம்.  பெண்களின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 2.3 சதவீத அளவுக்கு முதலீடு (Harvard Business Review)  கிடைப்பது பற்றி தங்களது கருத்து?  இந்த ஆய்வுத்தகவல் எனக்கு ஏமாற்றம் தந்தது. நான் ஆய்வுத்துறையில் பல்லாண்டு காலமாக  இருப்பதால் அதிர்ச்சி ஏற்படவில்லை.   கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்த முடியுமா? 10 ஆண்டுகளுக்கு மேலாக கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்

2020ஆம் ஆண்டின் முக்கியமான அறிவியல் செய்திகள் ஐந்து!

படம்
                          முக்கியமான அறிவியல் செய்திகள் 2020 விண்ணில் பெண் ! ஆர்டெமிஸ் விண்வெளித் திட்டத்தில் பெண்களும் பங்கேற்பார்கள் என நாசா நிறுவனம் செப்டம்பரில் அறிவித்தது பலரையும் கவர்ந்தது . எஸ்எல்எஸ் எனும் லாஞ்ச் சிஸ்டத்தை தயாரித்து வருகிறது . ஓரியன் விண்கலத்தை இதற்கு பயன்படுத்தவிருக்கிறது . இந்த திட்டம் நவம்பர் 2021 இல் திட்டமிடப்பட்டுள்ளது . மொத்த நாட்கள் விண்வெளியில் இருப்பது என 26 நாட்கள் திட்டமிட்டுள்ளனர் . இதில் ஆறு நாட்கள் நிலவைச்சுற்றி வரும் திட்டம் உண்டு . ஆர்டெமிஸ் 2 திட்டம் 2023 இல் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் . இந்த திட்டம் வெற்றிபெற்றால் அப்போலாவுக்கு பிறகு 1972 க்குப் பிறகு வெற்றிகரமாக மனிதர்களோடு நிலவுக்குசெல்லும் திட்டம் இதுவாகவே இருக்கும் . ஆர்டெமிஸ் 3 என்பது மனிதர்கள் நிலவுக்கு செல்லும் திட்டத்தைக் கொண்டது . இது வெற்றியடைந்தால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்கள் செல்வது சாத்தியமானது என்று வரலாற்றில் பதிவாகலாம் . புற்றுநோயை குணமாக்க முடியும் நடப்பு ஆண்டில் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புற்றுநோய் செல்களை செயலிழக்க

கிரிஸ்பிஆர் குழந்தைகளை உருவாக்குவேன் - ரஷ்ய ஆராய்ச்சியாளரின் தில்!

படம்
கிரிஸ்பிஆர் குழந்தைகள் ரெடி! ரஷ்யாவைச் சேர்ந்த காது கேளாத தம்பதிகள் ஐவர்,  தங்களின் குழந்தைகளின் டிஎன்ஏவை செம்மை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர் என்று உயிரியலாளர் டெனிஸ் டெப்ரிகோவ் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசிடம் இதுபற்றிய அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார். அரசின் அனுமதி கிடைக்குமா இல்லையா என்பதை அவரை விட பிற நாடுகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனமுடன் பார்த்து வருகின்றனர். காது கேளாத இத்தம்பதிகளுக்கு மரபணு வரிசைப்படி பிறக்கும் குழந்தைக்கும் காது கேட்காமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்கவே கிரிஸ்பிஆர் சிகிச்சையை நாடுகின்றனர். இதன்மூலம் ஹெச்ஐவி முதல் காது கேளாமை வரை தீர்க்க முடியும் என்று நம்புகின்றனர். சீனாவில் அரசு அனுமதியின்றி குழந்தைகளை கிரிஸ்பிஆர் செம்மையாக்கல் செய்த சம்பவம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? BJ2 எனும் மரபணுவை மாற்றினால் பிறக்கும் குழந்தைகளின் காது கேளாமையைத் தீர்க்க முடியும் என டெனிஸ் நம்புகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆய்வாளர்கள் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கான வாய்ப்புகள் உள