கிரிஸ்பிஆர் குழந்தைகளை உருவாக்குவேன் - ரஷ்ய ஆராய்ச்சியாளரின் தில்!




Image result for russian biologist denis rebrikov




கிரிஸ்பிஆர் குழந்தைகள் ரெடி!

ரஷ்யாவைச் சேர்ந்த காது கேளாத தம்பதிகள் ஐவர்,  தங்களின் குழந்தைகளின் டிஎன்ஏவை செம்மை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர் என்று உயிரியலாளர் டெனிஸ் டெப்ரிகோவ் தகவல் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசிடம் இதுபற்றிய அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார். அரசின் அனுமதி கிடைக்குமா இல்லையா என்பதை அவரை விட பிற நாடுகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனமுடன் பார்த்து வருகின்றனர்.

காது கேளாத இத்தம்பதிகளுக்கு மரபணு வரிசைப்படி பிறக்கும் குழந்தைக்கும் காது கேட்காமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்கவே கிரிஸ்பிஆர் சிகிச்சையை நாடுகின்றனர். இதன்மூலம் ஹெச்ஐவி முதல் காது கேளாமை வரை தீர்க்க முடியும் என்று நம்புகின்றனர். சீனாவில் அரசு அனுமதியின்றி குழந்தைகளை கிரிஸ்பிஆர் செம்மையாக்கல் செய்த சம்பவம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?


BJ2 எனும் மரபணுவை மாற்றினால் பிறக்கும் குழந்தைகளின் காது கேளாமையைத் தீர்க்க முடியும் என டெனிஸ் நம்புகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆய்வாளர்கள் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கான வாய்ப்புகள் உள்ளனதான். ஆனாலும் முயற்சி செய்யாமல் அறிவியல் எப்படி வளரும்? தொழில்நுட்ப ரீதியாக டெனிஸின் முயற்சி பயனளிக்கும்தான் என்கிறார் ஆய்வாளரான பர்ஜியோ.

நன்றி: நியூ சயின்டிஸ்ட்