உலகப்புகழ்பெற்ற பேருரைகள் - ஆபிரஹாம் லிங்கன்!




Abraham Lincoln Illustration limited edition print on Etsy, $15.00


மக்களுக்காக, மக்களால் உருவான மக்கள் அரசு
-ஆபிரஹாம் லிங்கன்


அமெரிக்காவில் நீடித்த அடிமை முறைக்கு எதிரான உள்நாட்டுப் போர் லிங்கன் காலத்தில் வெடித்தது. அடிமை முறையை நீக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இவர்களை முடக்க அரசு ராணுவப்படை விரைந்தது. இதில் பல்லாயிரம் ராணுவ வீரர்கள் தம் உயிரை பறிகொடுத்தனர். இந்த இடமே பின்னால், அடிமைமுறையை ஒழித்ததற்கு இன்றும் நினைவுகூரப்படுகிறது,

அமெரிக்க அதிபர்களின் உரையிலேயே மிகச்சிறிய உரை இதுதான். ஆனால் ஏற்படுத்திய அற்புதமானது. காரணம், போரை ஆதரித்த பாட்ரிக் ஹென்றியை விட மனிதாபிமானத்தை வலியுறுத்திய லிங்கன், அமெரிக்கா எதிர்காலத்தில் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கான விதிகளையும் கூட உருவாக்கியவர்.


நம் முன்னோர்கள் நமக்குப் பெற்றுக்கொடுத்த சுதந்திரம் நம் மக்கள் அனைவருக்குமானது. அனைவரையும் ஒன்றாக பாவிக்கும் தன்மையை நாம் உறதிப்படுத்த வேண்டும். உள்நாட்டுப்போரில் அர்ப்பணிப்புடன் வீரர்கள் பங்கேற்று செய்த தியாகத்தினால் இந்த லட்சியம் உறுதிப்பட்டுள்ளது. உயரிய லட்சியத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களால் அமெரிக்காவின் இறையாண்மை இன்றும் உயிர்வாழ்ந்து வருகிறது.

உலகம் எப்போதும் நாம் பேசுவதைக் குறைவாகவே நினைவுகூரும். ஆனால் வீரர்களின் செயல்பாட்டை என்றும் மறக்காமல் நினைவு வைத்திருக்கும். நமக்கு இன்னும் முடியாத பணி ஒன்று காத்திருக்கிறது. அது , வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தும் தீர்க்க முடியாமல் விட்டுச்சென்ற பணி. நாம் அதனைத் தொடர்ந்திட வேண்டும். இல்லையெனில் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாகம் வீணாகிவிடும். இறைவனின் அருளால் உருவான இந்த நாடு மக்களால் மக்களுக்காக மக்களே உருவாக்கியது. இது கனவாக மாறக்கூடாது.

நன்றி: ஆம்னெஸ்டி பல்கலைக்கழகம்

தோழர் மோகன்ராஜ்.




பிரபலமான இடுகைகள்