உடல் தன்னைப பாதுகாத்துக்கொள்ளும் நிலை - ஹோமியோஸ்டேசிஸ்!



ஹோமியோஸ்டேசிஸ்!

நம்முடைய உடல் 98.6 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்தால் மட்டுமே ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சரியாக இருக்கும். இல்லையெனில் உடல் உள்ளுறுப்புகள் மெல்ல செயலிழந்து போகும் அபாயம் உண்டு. இதைத்தான் ஹோமியோ ஸ்டேசிஸ் என்று கூறுகிறார்கள்.

இதனை உளவியல் சார்ந்தும் மருத்துவர்கள் அணுகுகிறார்கள். எப்படி என்றால், வெளியுலகைச் சார்ந்து சூழல் மாறினாலும் உடலின் நிலை மாறாமல் இருப்பது. இதனை ஏற்றும் மறுத்தும் பல்வேறு கருத்துகள் உள்ளன. உளவியலாளர் வால்டர் கனோன், தி விஸ்டம் ஆஃப் பாடி(1932) என்ற நூலில் இதுகுறித்து எழுதியுள்ளார்.


இதில் பாதிப்பு ஏற்படும் போது உடல் உறுப்புகள் மூளைக்கு தகவல்களை அனுப்புகின்றன. எதிர்மறை உணர்வு என்று சிக்னல் கிடைத்ததும், மூளை உடலின் வெப்பநிலையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறது. இதுவும் செயலிழக்கும் நிலையில் உயிர் பறிபோகிறது. வெப்பம் அதிகரிக்கும்போதும்போது ஏற்படும் பாதிப்பைப் போலவே, குளிர் கூடும்போது உடலில் நடுக்கும் ஏற்படுத்துவதன் வழியாக ரத்தம் தடையின்றி பாய்கிறது.


நன்றி: லிவ் சயின்ஸ்