அரசு தன் கடமைகளை ஒழுங்காக செய்தாலே போதும்! - சேட்டன் பகத்





Image result for chetan bhagat illustration





ஹைதரபாத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை உயர்கல்வி நிறுவனங்கள் எப்படி அரசியல் முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது எடுத்துக்காட்டாக உள்ளது. அம்மாணவர், கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, கல்விக்கட்டணம் கட்டாததற்கு மனிதவளத்துறையின் தூண்டுதல் மூலம் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரோஹித்தின் அரசியல் செயல்பாடுகள் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது கல்லூரி நிர்வாகமே ஒழிய மனித வளத்துறை அல்ல. பண்டாரு தத்தாத்ரேயாவிடம், ஏபிவிபி மாணவர் அணி புகார் கொடுக்க அவர் உடனே மனித வளத்துறை அமைச்சரான ஸ்மிருதி ராணியிடம் தொடர்புகொண்டார். மனிதவளத்துறை கொடுத்த அழுத்தத்தால், கல்லூரி நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட ஐவரை விடுதியிலிருந்து நீக்கியிருக்கிறது.

இந்த நடவடிக்கை ஏற்படுத்திய அழுத்த த்தால் மாணவர் ரோஹித்தின் உயிர் பறிபோயிருக்கிறது. இதில் அவர் தலித் என்பது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. இதில் நாம் பேச ஏதுமில்லை. அரசு, தரவேண்டிய உதவித்தொகையை தாமதமின்றி அனுப்பி வைத்திருக்கலாம் என்பது பற்றி இந்த விவகாரத்தில் யாரும் பேசவில்லை. அரசு தன் தரப்பிலான பிரச்னைகளை சரி செய்திருந்தால் போதுமானது. ஆனால் அரசியல் அழுத்தங்களுக்கு தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் வளைந்து கொடுப்பது ஆபத்தானது.

கல்லூரியில் நடைபெறும் விவகாரங்களில் மனிதவளத்துறை தலையிடும் அவசியம் என்ன வந்தது? அப்படி தலையிடவேண்டும் என்றால் எத்தனை கல்லூரிகளில் அரசு இம்முறையில் மாணவர்களை நீக்க வேண்டியிருக்கும்?

இந்திய அரசு, உயர்கல்விக்கு செய்யவேண்டிய செயல்கள் நிறைய உள்ளன. அதைக் கைவிட்டு மாணவர்களின் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைக்கும் செயல்பாடுகளுக்குள் ஏன் செல்கிறது. இது அனைத்து கல்வி நிறுவனங்களின் கருத்துகளையும், உரிமைகளையும கட்டுப்படுத்தும் சர்வாதிகாரத்தில்தான் கொண்டு போய் நிறுத்தும்.

சேட்டன் பகத்தின் இந்தியா பாசிட்டிவ் நூலின் கட்டுரைகளைத் தழுவியது.