பத்து ஆண்டுகளில் நிறைவான கல்வி - இந்திய அரசின் திட்டம் வெல்லுமா?
இந்தியா, 2030 ஆம் ஆண்டில் நூறு சதவீத கல்வி என்ற லட்சியத்தை நோக்கி அடியெடுத்து வைத்து வருகிறது. ஐ.நா சபை, மற்றும் யுனெஸ்கோ ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றும் முடிவை அரசு எடுத்துள்ளது.
அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் 6 - 17 வயதிலுள்ள மாணவர்களில் ஆறில் ஒருவர் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 2030 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகள் தொடக்க கல்வியை நூறு சதவீதம் பேர் நிறைவு செய்திருப்பார்கள் என்றும், மேல்நிலைக்கல்வியை 84 சதவீதம் பேர் பெற்றிருப்பார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
2008 முதல் 2012 வரை இந்தியாவில் மாணவிகளின் சேர்க்கை அதிகமாகியுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் மேல்நிலைக்கல்வியில் இடைநிற்றல் அளவு 40 சதவீதமாக உள்ளது அபாயகரமானது. 2030 ஆம் ஆண்டில் 20 சதவீத இளைஞர்களும் , 30 சதவீத வயது வந்தோர்களும் கல்வி அறிவின்றி இருப்பார்கள். இந்தியாவில் கல்வி கற்பதில் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி கற்பதை கைவிட்டவர்களுக்கும் அதிக படிப்புகளைப் படிப்பவர்களுக்கும் உள்ள இடைவெளி வளர்ந்துகொண்டே போகிறது.
தொடக்க கல்வியை நிறைவு செய்பவர்களின் சதவீதம் நூறு என்றாலும், மேல்நிலைக்கல்வியை எட்டுபவர்களின் அளவு 37 சதவீதம்தான். 2000 ஆம் ஆண்டில் 84 சதவீதம் பேர் மேல்நிலைக்கல்வியை எட்டுவார்கள் என்று கருதப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மாணவிகள் மேல்நிலைக்கல்வியை நிறைவு செய்யும் அளவு 53 சதவீதமாகவும், மாணவர்களின் அளவு 66 சதவீதமாகவும் இருந்தது. இன்று அந்த எண்ணிக்கை முறையே 79%, 82% என உயர்ந்துள்ளது. 1999 ஆம் ஆண்டு பத்து மாணவர்களுக்கு எட்டு மாணவிகள் என்று இருந்த பள்ளிச்சேர்க்கை சதவீதம் இன்று பெருமளவு உயர்ந்துள்ளது.
வளர்ந்த மற்றும் நடுத்த நாடுகளில் பெண்கள் வேலைக்குச்செல்லும் சதவீதமும், சம்பள அளவும் பெருமளவு அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு நிகராக என்றால் இல்லை. ஆனால் அதனை எட்டிப்பிடிக்கும் காலம் தூரத்தில் இல்லை எனலாம். பீகாரில் அரசால் வழங்கப்பட்டுள்ள சைக்கிள் மூலம் குறைந்தபட்சம் பத்து மாணவிகளின் இடைநிற்றல் அளவு குறைந்துள்ளது. மேலும் மகிளா சக்தி கேந்திரம் மூலம் பெண்களின் வேலைவாய்ப்புகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
நன்றி: டைம்ஸ் - மனஸ் கோகைன்.