வெப்பமயமாதலால் அழியும் பூமி!
அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளை விட ஆபத்தானது. வெப்பமயமாதல் பிரச்னைகள்தான். இவைதான் இன்று நாட்டின் ஒரு பகுதியில் மேக உடைப்பையும் மற்றொரு இடத்தில் வறட்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
1600 களில் ஏற்பட்ட வெப்பமயமாதல் பல்வேறு உயிரிகளை துடைத்து அழித்தது. தற்போது ஏற்பட்டு வரும் 1 டிகிரி செல்சியஸ் உயர்வும் இத்தகையை பாதிப்பை ஏற்படுத்தும வாய்ப்பு உள்ளது.
மே 2019 ஆம் ஆண்டு கார்பன் டை ஆக்சைடு பாதிப்பு மில்லியனில் 415.39 எனும் அளவுக்கு உயர்ந்துள்ளதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
கார்பன் டை ஆக்சைடு 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயர்ந்துள்ளது.
கார்பன் டை ஆக்சைடின் உயர்வை 2050க்குள் 0 அளவுக்கு கொண்டு வருவது அவசியம்.
உலகம் வெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டால் கடல் நீர் மட்டம் 230 அடி உயரும்.
தொண்ணூறுகளோடு ஒப்பிட்டால் இன்று 500 சதவீத அளவுக்கு அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகிவருகின்றன.
மேற்கு அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகினால், கடல் நீர் மட்டும் 8.2 அடி அளவுக்கு உயரும்.
நன்றி: க்வார்ட்ஸ்