நம்பிக்கை தரும் சீனா ஸ்டார்ட் அப்கள்!
வர்த்தகப்போரில் ட்ரம்ப் ஆவேசமாக ஈடுபட்டாலும், அது தேர்தலுக்கானதாகவே இருக்கும் என உறுதியாக தெரிகிறது. ஏனெனில் அமெரிக்காவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கான வாடிக்கையாளர்களை சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தேடி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்க விவசாயிகள் தங்கள் சோயாபீன்களை விற்கும் சந்தையாக சீனாவையும் பிற நாடுகளையும் நம்புகிறார்கள்.
இதில் முக்கியமான முரண்பாடு, இவர்கள்தான் ட்ரம்பை தேர்ந்தெடுத்தார்கள். ட்ரம்ப் வர்த்தகப்போரைத் தொடுத்து அவர்களுக்கு கிடைத்த வந்த விவசாய வருமானத்தையும் பெருமளவு குறைத்துவிட்டார்.
ட்ரம்பின் வாய்சவடால்களால் அமெரிக்காவிலிருந்து அங்கு ஏற்றுமதியான சரக்குகள் 30 சதவீதம் குறைந்துள்ளன. சீனாவிலிருந்து அமெரிக்கா பெறும் பொருட்களின் இறக்குமதி 8 சதவீதம் குறைந்துள்ளன.
2020 ஆம் ஆண்டு 550 மில்லியன்களாக நுகர்வுப்பொருள் விற்பனை இருக்கும் என்று கூறுகிறார் மார்வெலஸ் புட்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனரான, கிரிஸ்டியானா ஜூ. அதேநேரத்தில், 5.6 ட்ரில்லியன் டாலர்களாக உள்நாட்டு ச்சந்தை மாறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். அமெரிக்காவின் உள்நாட்டுச்சந்தை தற்போது 5.5 ட்ரில்லியனாக உள்ளது. வர்த்தகப்போர் தொடர்ந்தால் சீனாவின் வளர்ச்சி சதவீதம் 1 சதவீதம் குறையும். தற்போது அமெரிக்காவில் முதலீடு செய்யும் சீன முதலீட்டாளர்களின் சதவீதம் பெருமளவு சரிந்துவருகிறது. இவர்களின் சதவீத அளவு 89.
சீனாவில் 98 சதவீத மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.அதாவது, 802 மில்லியன் மக்கள். எனவே இங்குள்ள பிட்ச்புக் போன்ற ஸ்டார்ட்அப்களுக்கு நல்ல சந்தை கிடைத்துள்ளது. கல்லூரி பட்டதாரிகள் பலரும் பயனர்களாகி வருகின்றனர். அமெரிக்காவைவிட சீனாவில் ஸ்டார்ட்அப் சூழல் நன்றாகவே இருக்கிறது. வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.
நன்றி: ஓஸி - பென் ஹால்டர்