எழுத்தாளரை சிறைப்படுத்திய சீனா!
எழுத்தாளரும், இணைய விமர்சகருமான யாங் ஹெங்ஜூன் என்பவரை. சீன அரசு சிறையில் ஆறு மாதமாக அடைத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 19 அன்று குவாங்ஜூ விமானநிலையத்தில் சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டார். யாங் ஹெங்ஜூன் தன் குடும்பத்துடன் ஷாங்காய் செல்லும் முயற்சியில் அங்கு இருந்தார். அமெரிக்காவில் பணியாற்றிய யாங், நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலையில் வருகைதரும் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
அவர் சீனாவுக்கு அடிக்கடி வந்து செல்வதை தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தாக உளவுத்துறை சந்தேகப்பட்டது. மேலும் யாங் கைது செய்யப்படுவது முதல்முறை கிடையாது. 2011 ஆம் ஆண்டு கூட சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விசாரிக்கப்படும்போது அவரின் நடவடிக்கைகளை சொல்லுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் குடிமகனாக யாங் இருந்து வருகிறார். 1980 களில் சீனா வெளியுறவுத்துறையில் பணியாற்றியுள்ளார். ஆனாலும் கூட ஆஸ்திரேலியா அரசு கைதுக்கு கண்டனம் தெரிவித்து உதவிக்கு வரவில்லை. இவரின் கைது குறித்து அரசியல் எழுத்தாளர் கிரிஸ் உஹிமன் போன்றவர்தான் இணையத்தில் இப்பிரச்னையை எழுப்பி வருகின்றனர். இவரைப் போலவே ஹக்கீம் அல் அரைபி என்ற பஹ்ரைன் அகதி, கூடைப்பந்தாட்ட வீரர். ஆஸ்திரேலியாவின் நிரந்தர விசா கொண்டவர் தாய்லாந்தில் கோடை விடுமுறைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.
யாங்கின் கைதுக்குப் பிறகு அவரின் ட்விட்டர் கணக்கு இயக்கப்படவில்லை. அதற்கு முன்பே அவரின் வலைத்தளம் இயக்கத்தை நிறுத்திவிட்டது. அவர் எழுதிய கட்டுரைகளில் சில இணையத்தில் இன்றும் பகிரப்பட்டு வருகிறது.
யாங்கின் நண்பர்களையும் சீன அரசு காவல்துறை குறிவைத்து கைதுசெய்து அவர்களின் நடவடிக்கைகளை விசாரித்துள்ளது. இதுபற்றி பல நாளிதழ்கள் மௌனம் சாதித்துள்ள நிலையில் ஆஸி.யிலுள்ள ஓபி மேகசின் மட்டும் ஆஸி. அரசு தலையிட்டு யாங்கை மீட்க வேண்டும் என்று மனிதாபிமானமாக பேசியுள்ளது. ஆஸி. அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த கோரிக்கையை மறுத்துள்ளார். மற்றொரு குடிமகன் வடகொரியாவில் சிறைவாசம் அனுபவித்து வருவதையே கண்டுகொள்ளாத ஆட்கள்? யாங்கை எப்படி காப்பாற்ற வருவார்கள்?
சீன மெல்ல ஜனநாயகத்தை கரைத்து ஒற்றை சர்வாதிகார நாடாக மாறி வருகிறது. இதன் விளைவாக சொந்த மக்களையே கண்காணிப்பதும், சுதந்திரமாக கருத்துக்களை பேசுபவர்களை கைது செய்து மிரட்டுவதும் தொடங்கியிருக்கிறது. இது சீனாவுக்கு அதிகாரப்பசியை தீர்க்கலாமே ஒழிய, நல்ல நாடாக பெயர் எடுப்பது சிரமம்.
நன்றி: குளோபல் வாய்ஸ்