மேக் இன் இந்தியா- கூடுதல் வரி சாதிக்குமா?
இந்தியத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வரிவிதிப்பு!
நடப்பு ஆண்டின் பட்ஜெட்டில் (2019-20) தங்கம், வெள்ளி, பெட்ரோலியம் நீங்கலாக பல்வேறு தொழில்துறையினருக்கு 10.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வரிவிதிப்புகள் கூடியுள்ளன. என்ன காரணம்? மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தத்தான்.
இந்த வரிவிதிப்புகளால் உள்நாட்டில் உற்பத்தித்துறை ஊட்டம் பெறும் என நம்புகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் இந்திய அரசுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக், ரப்பர் (33%), காகிதம் (11%), வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் (10%) இரும்பு மற்றும் உலோகப் பொருட்கள் (7%), எலெக்ட்ரிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் (34%) மற்றும் பிற பொருட்களுக்கு 4 சதவீத வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்கா (5.21%), ஐரோப்பா (15.17%), சீனா (25.38) ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது.
அரசின் வரி உயர்வுகளால் அதிகம் பாதிக்கப்படுவது சீனா நாடுதான். வரிவிதிப்பை, இந்திய உற்பத்தித்துறையை காப்பாற்றும் வாய்ப்பாக அரசு நினைக்கிறது. ஆனால், இதன் விளைவாக வெளிநாட்டு நிறுவனங்கள் தம் உற்பத்தித் துறையை இந்தியாவில் தொடங்குவதற்கு நம்பிக்கை இழந்து தயக்கம் காட்டுவார்கள்.
அடுத்து, வரி உயர்வுக்கு எதிராக பிற நாடுகளும் இந்தியப் பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஒருவகையில் அரசின கூடுதல் வரி விதிப்புகள் இந்தியாவை ஜப்பான், தென் கொரியா போல தொழில்மயமாக்கும் என அரசு நம்பலாம். ஆனால் உலகமயமாக்கலில் இந்த நடவடிக்கை எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்று தெரியவில்லை.
நன்றி: எகனாமிக் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா
படம் - பின்டிரெஸ்ட்