கதாபாத்திரம் கோரும் உழைப்பை நான் தருகிறேன்!






ஆயுஷ்மான் குரானா

நீங்கள் நடித்த விக்கி டோனர் திரைப்படம், பிற இந்தி திரைப்படங்கள் போல கிடையாது. நவீன திரைப்படத்திற்கான கருத்தைக் கொண்டிருந்தது.

இதற்கு ரசிகர்களைத்தான் பாராட்ட வேண்டும். அவர்கள் பரிணாம ரீதியாக தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறார்கள். அவர்களோடு சினிமாவும், சமூகமும் சேர்ந்து வளருகிறது.


இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன?

தொண்ணூறுகளுக்கு முன்பு நடுத்தர வர்க்க குடும்பங்கள் சினிமா பார்ப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இன்று அவர்கள் சிறு, குறு, பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்தபின்தான் அவர்களுக்கான மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் கட்டப்படத் தொடங்கின. மக்களும் புதுப்புது கான்செப்டில் அமைந்த படங்களை ரசிக்கத் தொடங்கினர்.


முதலில் நஸ்ரூதின் ஷா, ஓம்பூரி ஆகியோர் நடித்த படங்களுக்கு கூட்டம் அள்ளியது. பின்னர் சிறிய படங்கள் 200 கோடி கிளப்பில் சேர்ந்தன. இதைப்பற்றி தங்கள் கருத்து?

இந்தி திரைப்பட உலகில் அனைத்து படங்களுக்கும் இடமிருக்கிறது. சிம்பா என்ற படமும் நன்றாக ஓடியது. நான் நடித்த பதாய் ஹோ என்ற படமும் வெற்றிகரமாகத்தானே ஓடியது. நட்சத்திரம் நடித்த படம் என்பது வசூலுக்கு உதவும் என்பது உண்மைதான். ஆனால், கதை நன்றாக இருந்தால்தான் உங்கள் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். நல்ல கதை என்பது இன்றைய ஃபேஷன் இது,டிரெண்ட் என்பதையெல்லாம் தாண்டியது.

எப்படி இதற்கு செட் ஆகிக்கொள்கிறீர்கள்?

அதற்கு காரணம், நான் உருவாகி வந்த நாடகப் பின்னணிதான். அங்கு நாடகம் நடிப்பதோடு இசை, எழுத்து என பலவேலைகளைச் செய்து வந்தேன். அதுதான் வேறுபட்ட திரைப்படக் கதைகளை உருவாக்க உதவுகிறது. நாடகத்தில் சீரியசான கதைகளில் நடித்து வந்தேன். ஆனால் இந்தி திரையுலகில் அதுபோல எனக்கு கேரக்டர்கள் கிடைக்கவில்லை. ஆர்ட்டிக்கிள் 15 என்ற படத்தில்தான் எனக்கு சீரியசான கதாபாத்திரம் கிடைத்தது.

நீங்கள் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தும் கூட வணிகப்படங்களில் அதிகம் நடிக்கவில்லையே ஏன்?

நான் பத்திரிகையாளராக இருந்தேன். பின்னர் டிவியில் தொகுப்பாளராக பல நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்துள்ளேன். விக்கி டோனர் படத்துக்கு முன்பே எனக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் விக்கி டோனர் கதை எனக்கு வித்தியாசமாக பட்டது. அதனால்தான் சூஜித் சர்கார் என்ற இயக்குநர் உருவானார். இவரின் அடுத்த படத்திலும் நான் நடிக்கிறேன்.

நீங்கள் நிறைய படங்களில் நடிக்கிறீர்கள். பல்வேறு வித்தியாசமான கேரக்டர்கள் எப்படி உள்வாங்கிக்கொள்கிறீர்கள்.


நான் அந்தாதூன் படத்தில் நடிக்கும்போதுதான் பதாய் ஹோ படத்திலும் நடித்து வந்தேன். ஆனால் ஆர்ட்டிகிள் 15 படத்தில் நடிக்கும்போது, அந்தக் கேரக்டரை உள்வாங்கி, நடிக்க நேரம் எடுத்துக்கொண்டேன். காரணம் அந்த கதாபாத்திரம் அப்படிப்பட்ட உழைப்பைக் கோரியதுதான்.

நன்றி: அவுட்லுக் - கிரிதர் ஜா.