பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறதா?





school






பள்ளிசெல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது!



 2018-19 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, இந்தியா. ஆனால், ஆய்வில் இந்திய மக்கள்தொகை எதிர்பார்த்த எண்ணிக்கையை விட குறையும் என பொருளாதார ஆய்வறிக்கை தகவல் கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளது.  அதேநேரம் 2030 ஆம் ஆண்டு அதிகரித்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கையையும் இந்திய அரசு சமாளிக்கவேண்டிய தேவை உள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, பள்ளிக்குச்செல்லும் 5 முதல் 14 வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை குறைவைத்தான். தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநில அரசுகளும் அரசு பள்ளிகளை மூடி வருகின்றன. காரணம், போதிய மாணவர்கள் அங்கு இல்லாததுதான். மாநில அரசுகள் புதிய பள்ளிகளைத் தொடங்குவதை விட மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை இணைப்பது நல்லது என அறிவுறுத்தல்களையும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை குறையும். இதனால் அரசு திட்டங்களை மாநிலங்கள் எளிதாக பற்றாக்குறையின்றி பெறமுடியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. பொருளாதார ஆய்வறிக்கையை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன், வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலர்களாக மாற்றவேண்டும் என்ற பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு, பொருளாதார அறிக்கை உதவக்கூடும்.

 பெண்கள் கருவுறும் விகிதம் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்துள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவ்விகிதம், இந்திய அரசின் கணிப்பைத் தாண்டி அதிகரித்துள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையின் கணிப்புப்படி 2021 ஆம் ஆண்டு, மக்கள்தொகை  1.8 சதவீதம் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 1970-80 களில் மெல்ல குறையத்தொடங்கியது. 1971-81 காலகட்டத்தில் 2.5 சதவீத மக்கள்தொகை உயர்வு இருந்தது. இந்த சதவீதம் 2011 -16 காலகட்டத்தில் 1.3 சதவீதமாக சரிந்தது. மக்கள்தொகை குறிப்பிட்ட அளவு என கட்டுப்படுத்தப்பட்டால், அரசு திட்டங்கள் மேலும் வேகம்பிடிக்க வாய்ப்புள்ளது.

நன்றி: downtoearth.org
படம் - தி இந்து

வெளியீட்டு அனுசரணை - தினமலர் பட்டம்


இக்கட்டுரை பொருளாதார அறிக்கை 19-20 ஆண்டுக்கானதில் இருந்து குறிப்பிட்ட அம்சங்களை மட்டுமே பேசுகிறது. இதற்கும் ஐ.நா. சபை உள்ளிட்ட பிற உலகளாவிய அமைப்புகளின் ஆய்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

பிரபலமான இடுகைகள்