இந்தியர்களுக்கு டிஜிட்டல் யுகத்திலும் வேலைவாய்ப்புகள் இருக்கிறது!











ஆனந்த் கோபால் மகிந்திரா...இன்று ட்விட்டரில் யார் இருக்கிறார்களோ இல்லையோ. இந்தியா மற்றும் உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் ஆனந்த் கவனிக்கிறார். நிறுவன முதலாளிக்கு இதற்கெல்லாம் நேரமிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால் அதற்கும் அவர் பதில் வைத்திருக்கிறார்.

உங்களுடைய நிறுவனத்தில் எந்த பதவி எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்?

சீஃப் பீப்பிள் ஆபீசர் என்ற பதவிதான். அல்லது சீஃப் கவர்னன்ஸ் ஆபீசர் என்ற பதவி. காரணம், இன்று நிறுவனம் உலகளவில் உயர அந்நிறுவனத்தின் மதிப்பு, பிராண் ட் முக்கியம். என் வாழ்க்கையில் நான் ஃபெராரி கார் வாங்குவேன். அதுதான் என லட்சியம் என்று ஒருவர் சொன்னால், அவர் எப்படி நேர் வழியில் பயணிப்பார். அப்படி ஒருவர் நிறுவன அதிகாரி என்ற முறையில் தேர்ந்தெடுத்தால் நிறுவனத்தின் மதிப்பு என்னாகும்? நோக்கம் என்னாகும்? சொல்லுங்கள்

20.7 பில்லியன் டாலர்களைக் கொண்ட நிறுவனத்தின் இயக்குநர் நீங்கள். ஆனால் உங்களை வேறெங்கும் பார்ப்பதைவிட ட்விட்டரில் பார்க்க முடிகிறதே?

நான் சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாப்ட் மற்றும் சில மென்பொருள் நிறுவனங்களிடம், அனைத்து நிறுவனங்களையும் நேரடியாக பார்க்குமாறு வசதியைச் செய்து கொடுங்கள் என்று கேட்டிருந்தேன். அது சரியாக நடக்கவில்லை என்று வையுங்கள். ஆனால் அதற்கு எந்த செலவின்றி ட்விட்டர் உதவுகிறது. குவகாத்தியில் இருந்து வந்த ட்விட்டர் செய்தியைப் பார்த்தேன். ஃபர்ஸ்ட் கிரை என்ற எங்களது கடையில் விற்ற பவுடர் பற்றிய புகார் அது. கடைக்காரர் பவுடரின் விலையை மறைத்து கூடுதல் விலைக்கு விற்றிருக்கிறார். உடனே நான் ஃபர்ஸ்ட் கிரை கம்பெனி இயக்குநருக்கு அந்த ட்விட்டை அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தேன். உடனே நடவடிக்கை எடுத்தால், அப்புகாருக்கு காரணம் அந்த பிரான்சைஸ் முதலாளி என இறுதியில் தெரிய வந்தது.
இதேபோல, குடிபோதையில் மயங்கி சரிந்துகிடந்த இளம்பெண்ணை எங்கள் நிறுவன பாதுகாவலர் நீர் கொடுத்து எழுப்பி ஆட்டோவில் வைத்து அவரின் வீட்டுக்கு அனுப்பிய செய்தி. நான் அந்த பாதுகாவலரைக் கூப்பிட்டு அவரின் மனிதநேயத்தைப் பாராட்டினேன். அதிலிருந்து எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு இதுபோல அக்கறையான பயிற்சிகளையும் வழங்குகிறோம். ட்விட்டர் என்பது நவீன தலைமுறைக்கான வர்த்தக கருவியாக மாறியிருக்கிறது. நான் புகார்களை நேரடியாக பெற முடிகிறது பாருங்கள்.

தொழில்நுட்பத்தில் இந்தியர்கள் வேலை வாய்ப்புகளை பெற முடியுமா?

நான் நேர்மறையாகவே யோசிக்கிறேன். ஏன் முடியாது? இங்கிருந்து அமெரிக்காவுக்கு நாம் பணியாற்ற முடியவில்லையா? இந்தியாவுக்கு மட்டுமல்ல இது உலகிற்கே டிஜிட்டல் யுகம்தான். பொறியியல் படித்துவிட்டு வெளியே வருகிற இளைஞருக்குஉடனே வேலை செய்யும் திறன் இருக்கிறது. வேலைக்கான பயிற்சிகள் சில திறன்களை அவர் கற்கவேண்டும். அதற்குத்தான் தொழில்நுட்பம் இருக்கிறது. இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெறுவதில் வாய்ப்பு இருக்கிறதென்றே கருதுகிறேன்.


நன்றி: க்வார்ட்ஸ்