புரோட்டின் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது நல்லதா?




Image result for protein icecream


புரோட்டின் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?

சாதாரண ஐஸ்க்ரீமில் கொழுப்பு அதிகம் இருக்குமென்றால், இதில் புரோட்டீன் சார்ந்த பொருட்கள் அதிகமாக இருக்கும். மற்றபடி அனைத்தும் ஒன்றுதான். செயற்கை இனிப்பூட்டி ஸ்டெவியா என்பதை ஐஸ்க்ரீம் தயாரிப்பாளர்கள் சேர்ப்பாளர்கள். விலை குறைவு, சுவையோ சுவை என்பதால்தான் இந்த சுவையூட்டியை பயன்படுத்துகிறார்கள்.

473 மில்லி ஐஸ்க்ரீமில் புரோட்டினின் சதவீதம் 20 ஆக இருக்கும். சர்க்கரையின் கலோரிகளை இதில் குறைத்திருப்பார்கள். வே புரோட்டின் இந்த ஐஸ்க்ரீம்களில் சேர்க்கப்படும் முக்கியமான பகுதிப்பொருள். உடற்பயிற்சியை தீவிரமாக செய்பவர்களுக்கு இந்த ஐஸ்க்ரீம் சுவாரசியமான நொறுக்குத்தீனியாக இருக்கும்.


புரதம் எளிதாக செரிமானம் ஆகாது. விற்பனைக்காக இதில் சர்க்கரை கூடுதலாக சேர்ப்பதும் உண்டு. பிற ஊட்டச்சத்துக்கள் இதில் கிடையாது. மேலும் அதிகம் சாப்பிடத் தூண்டும் ஆபத்தும் இதில் உண்டு.

இதனை வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்பது உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு நல்ல செய்தி.

நன்றி: ஹெல்த்லைன்