இடுகைகள்

வட்டப் பொருளாதாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொருட்களை திரும்ப பயன்படுத்தும் வட்டப் பொருளாதாரம்!

படம்
  வட்ட பொருளாதாரம் ஒரு பொருளைப் பயன்படுத்திவிட்டு அதை அப்படியே பயன்பாடு முடிந்ததும் தூக்கிப்போட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போவது சூழல் பிரச்னையை தீவிரமாக்குகிறது. இதற்கு எதிரானது, வட்டப் பொருளாதாரம். அதாவது சர்குலர் எகனாமி. இக்கருத்துப்படி, மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து அதைப் பயன்படுத்துவது, பிறகு அந்தப் பொருளை மீண்டும் மறுசுழற்சி செய்வது ஆகியவை உள்ளது. இதனால், கழிவுகள் உருவாவது குறைக்கப்படும். இதன்மூலம் இயற்கை சூழல் கெடுவது பெருமளவு குறைக்கப்படுகிறது. லீனியர் எகனாமி முறையில் பொருட்கள் பயன்பாடு முடிந்ததும் நேரடியாக குப்பைக்கு சென்றுவிடுகிறது. அதில் பயன்பாடு ஏதுமில்லை. அந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதும் கடினம். இந்த முறையில்தான் பல நூற்றாண்டுகளாக தொழில் உற்பத்தி நடைபெற்று வந்தது. நன்னீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது தொடங்கப்பட வேண்டும். அல்லது நீர்த்தேவையைக் குறைத்து சிக்கனமாக செயல்படுவது முக்கியம். பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்காத வகையில் வாகனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.