ஓமியோபதி மருந்துகளை எப்படி சாப்பிடுவது?
ஹோமியோபதியில் நான் சிகிச்சைக்கு சென்றபோது, ஆறே மாதம் நோய் தீர்ந்துவிடும் என மருத்துவர் சூளுரைத்தார். இதை தன்னம்பிக்கை அல்லது அகங்காரம் என எப்படி வகைப்படுத்துவது என தெரியவில்லை. பரவாயில்லை. ஆனால், அவர் சொன்ன காலகட்டம் எல்லாம் எப்போதே தாண்டிவிட்டது. தற்பெருமை கொண்டவர்களிடம் அவர்களின் திறமையின்மை பற்றி சொல்லக்கூடாது. கோபம் கொண்டுவிடுவார்கள். அடிப்படை தத்துவத்திற்கு வருவோம். உங்களுக்கு ஒரு நோய் உள்ளது. அந்த நோயை எந்த காரணி உருவாக்குகிறதோ, அதை நீரைச் சேர்ந்து நீர்த்துப்போன வடிவமாக மாற்றி மருந்துகள் உருவாக்கப்படுகிறது. பிறகு, மருந்தின் வீரியத்தை காக்க சர்க்கரை, ஆல்கஹால் என இரண்டில் பதப்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளிலும் அதன் தூய்மை, வீரியம் சார்ந்து மருந்துகளின் விலை பல்லாயிரம் வரை செல்கிறது. குறிப்பாக தாய் திராவகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஆங்கிலத்தில் மதர் டிங்க்சர் என்று கூறலாம். தாய் திராவகத்தை மருத்துவர் உள்ளுக்கும் சாப்பிடச்சொல்வார். வெளியில் கூட தடவலாம். ஏதாகிலும் அதை மருத்துவரே பரிந்துரைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்கும் மருந்துகள் மூன்று நா...