இடுகைகள்

சங்கீதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலூரின் தனித்துவமான பாடிபில்டர்! - சங்கீதா

படம்
  வேலூரில் உள்ள மார்க்கெட்டில் சுமைகளை தூக்குவதுதான் சங்கீதாவின் ஒரே வேலை. சட்டை, பேண்ட் போட்டு வேலைக்கு தயாராக இருக்கிறார். தினசரி இப்படி வேலை செய்தால்தான், வீட்டில் உள்ள இரு குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். 35 வயதான சங்கீதாவை விட்டு கணவர் விலகிப் போய்விட்டார்.  தினக்கூலியாக இப்படி வேலை பார்த்தாலும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதுதான் சங்கீதாவின் முக்கியமான லட்சியம். அண்மையில் இங்கு நடைபெற்ற பெண்களுக்கான பாடி பில்டர் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.  நான் பேண்ட் சர்ட் போட்டிருப்பதை பார்த்து நிறையப் பேர் எதற்கு இந்த உடை என்று கேட்டிருக்கிறார்கள். எனது வேலைக்கு இது உதவியாக இருக்கிறது. நான் நேர்மையற்ற எந்த விஷயத்தையும் செய்யவில்லை. நான் இப்போது பாடிபில்டர் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, என்னை விமர்சனம் செய்தவர்கள் கூட பாராட்டுகிறார்கள் என்றார் சங்கீதா.  ஜிம்மில் சங்கீதாவிற்கு பயிற்சி கொடுப்பவர், குமரவேல் என்ற ஜிம் மாஸ்டர். இவர் கொடுத்த ஊக்கத்தில்தான் சங்கீதா போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். பாடிபில்டிங் என்பது அதிக செலவு பிடிக்கும் துறை. பயிற்சி மட்டுமல்ல. சத்தான உணவ