சீனாவின் வெளியுறவுக்கொள்கை!
சீனாவின் வெளியுறவுக்கொள்கை! அமைதியான நல்லுறவு நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஐந்து அம்சங்களை அடிப்படையாக கொண்ட வெளியுறவுக்கொள்கை உருவாக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1954ஆம்ஆண்டு ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, சீனாவும், இந்தியாவும் வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தமிட்டன. அண்மையில், இதை நினைவுகூறும் வகையில், பெய்ஜிங் நகரில் விழா நடத்தப்பட்டது. இதில், சீனாவின் பிரதமர் லீ குவாங், அதிபர் ஷி ச்சின்பிங் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். மனித குலத்தின் எதிர்காலத்திற்கான அமைதியான ஒத்திசைவு கொண்ட வாழ்வை உருவாக்குவது என கொள்கைகள் பற்றி கூறப்பட்டது. உண்மையில் சீனா, இந்த கொள்கைகள் வழியாக என்ன நினைக்கிறது, உலகம் பற்றிய அதன் பார்வை என்ன என்பதைப் பார்ப்போம். இந்தியாவில் சீனாவின் வெளியுறவு கொள்கையை பஞ்ச சீல கொள்கை என்று அழைப்பார்கள். இக்கொள்கையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, நடைமுறைப்படுத்தி இயங்கினார். அண்டை நாடுகள் மற்றும் மேற்கு நாடுகள் தொடர்பான உறவுகளை தீர்மானித்த கொள்கை இது. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து இ்ந்தியா போராடி மீண்ட ஆண்டு, 1947. இதற்கு காந்தி தல...