இடுகைகள்

உலகம்- சீனாவின் கேமரா கண்காணிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறுகும் சீனாவின் கண்காணிப்பு- அப்டேட் ரிப்போர்ட்!

படம்
கண்காணிப்பு அரசு ! சீனாவிலுள்ள ஸெங்சூ , கிய்ங்டாவோ , வூஹூ ஆகிய நகரங்களில் உள்ள குற்றவாளிகளை போலீஸ கண்டுபிடித்து கைது செய்தது . சிம்பிள் ஏஐ தொழில்நுட்பம் மூலம்தான் . தேசியளவில் மக்களை கண்காணித்து கட்டுப்படுத்த ஏஐ கண்காணிப்பு திட்டத்தை நாடு முழுவதும் அமைத்து வருகிறது சீன கம்யூனிஸ்ட் அரசு . தற்போது 1.4 பில்லியன் மக்களை அரசு ஏஐ மூலம் கண்காணித்து பின்தொடர்ந்து வருகிறது . குற்றவாளிகளை பிடிக்க முக்கிய நகரங்களிலுள்ள ரயில்வே நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டும் கடன்களை கட்டாதவர்களின் பெயரும் பெரும் எல்இடி திரைகளில் வெளியிடப்பட்டுவருகிறது . வீடுகளின் நுழைவாயில்களிலும் முகத்தைக் கண்டுபிடுக்கும் அல்காரித கருவிகள் பொருத்தபட்டு அமெரிக்காவைக் காட்டிலும் 200 மில்லியன் கேமராக்களோடு சீனா கண்காணிப்பு தேசமாக மாறிவருகிறது . உய்கூர் முஸ்லீம் சிறுபான்மையினரை தீவிரமாக கண்காணிக்கும் சீன அரசு அவர்களின் உறவுகளை அத்தனையும் கண்காணித்து வருகிறது . " சமூகத்தையும் சமூகத்தையும் சீன அரசு அல்காரிதம் வழியில் கட்டுப்படுத்துகிறது " என்கிறார் பீட்டர்சன் உலகளாவிய பொருளாதார மையத்தை