இடுகைகள்

தடைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயகத்தை சக்தி வாய்ந்த அமைப்புகள் தடுக்கின்றன!

படம்
பேட்ரிக் பாசம் , இயக்குநர் , ஜனநாயக கழகம் . உலகம் முழுக்க பாப்புலிச சிந்தனை கொண்டவர்கள் வென்று அதிபர்களாகவும் , பிரதமர்களாகவும் உருவாகி வருகிறார்கள் . அப்போது ஜனநாயக சிந்தனை வலுவிழந்து வருகிறதா என்று கேள்வி எழுகிறது அல்லவா ? அதற்குத்தான் சரியான பதில்களை அளிக்க ஜனநாயக தன்மையை ஆராய்ந்து வரும் பேட்ரிக் பாசத்தைச் சந்தித்தோம் . ஜனநாயகம் இன்று என்ன நிலையில் இருப்பதாக கருதுகிறீர்கள் ? ஜனநாயகம் இன்று பல்வேறு சவால்களை சந்தித்தாலும் சரியான நிலையில்தான் இருப்பதாக நினைக்கிறேன் . ஆனால் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் இனி ஜனநாயகத்திற்கு உலகில் இடமில்லை என்று பேசி வருகிறார்கள் . அதற்குக் காரணம் அவர்கள் உருவாகி வந்த இடம்தான் என்று நான் அறிவேன் . மக்கள் இன்று தங்களின் அரசியல் நிலைமை சரியில்லை என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர் . அதனை தங்களது வாக்குகள் மூலம் மாற்ற முயல்கின்றனர் . தொண்ணூறுகளில் ஏற்பட்ட உலகமயமாக்க மாற்றங்களால் பணக்காரர்கள் பயன் பெற்றதாக மக்கள் நினைக்கிறார்கள் . இதனால்தான் அவர்களுக்கு பாப்புலிச தலைவர்களின் வாக்குறுதிகள் நம்பிக்கை அளிக்க அவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் .