இடுகைகள்

மலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - மலம்

படம்
  பீயுக்கும் ஈயுக்கும் என்னலே ஃபிரெண்ட்ஷிப்பு?   என ஓரம்போ படத்தில்   ஜான்விஜய் கேட்பார். காரண காரிய சமகால நட்பை, அந்தளவு கேவலமாக   கொச்சையாக ஆனால் மனதிற்கு உண்மையாக யாரும் சுட்டிக்காட்டி சொல்ல முடியாது. அதை விடுங்கள். மலம் என்றாலும் அதிலும் விஷயம் இருக்கிறது. உடலில் இருந்து வெளியேறும் மலத்தில் பல்வேறு கிருமிகள், தேவையில்லாத வேதிப்பொருட்கள் இருக்கும். அவை வெளியேறினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பசு ஒருநாளில் சுரக்கும் எச்சிலின் அளவு 98- 190 லிட்டர். மனிதர்கள் தம் ஆயுளில் வெளியிடும் அபான வாயுவின் அளவை வைத்து இரண்டாயிரம் பலூன்களை நிரப்பி வானில் பறக்க விடலாம். பலூன் வெடித்தால் என்னாகும் என்ற கேள்வியை த.வி.வெங்கடேஷ்வரனிடம் கேட்டுக்கொள்ளுங்கள். அபானவாயு, ஏப்பம், மலம் ஆகியவற்றை பண்ணை விலங்குகளான பசு, பன்றி, ஆடு மற்றும பிற விலங்குகள் வெளியிடுகின்றன. இதனால் உலகளவில் அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுவின் அளவு, 14.5 சதவீதம் ஆகும். ஜெயன்ட் பாண்டா, ஒருநாளுக்கு நாற்பது முறை மலம் கழிக்கிறது. யானை தினசரி பதினைந்து முறை சாணத்தை வெளியேற்றுகிறது. இந்த வகையில் நூறு கிலோ சாணம் வெளித்தள்ளப்படுகிற

டீ குடித்தால் கழிவறை நோக்கி ஒடுகிறீர்களா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி காபி, டீ குடித்தால் உடனே மலம் கழிக்கத் தோன்றுவது ஏன்? உடனே பீதியாகாதீர்கள். எனக்குக்கூட என் அம்மா வைக்கும் ரசத்தைச் சாப்பிட்ட உடனே பாத்ரூமுக்கு ஓடுவேன். அது குடும்பத்தில் நடக்கும் பழிக்குப்பழி சமாச்சாரம். அதை விடுங்கள். டீ, காபியில் ஏன் அப்படி நடக்கிறது?  காரணம் அதிலுள்ள ஊக்கமூட்டிகள் குடலை சற்று நெகிழ வைப்பதுதான். இதனால் உலகிலுள்ள 60 சதவீதம் பேர் காபியை ஆசையோடு குடித்துவிட்டு தலைதெறிக்கும் வேகத்தில் பாத்ரூமில் அடைக்கலமாகிறார்கள். இது தவிர்க்க முடியாது. இதுவே சாப்பிட்ட உடனே மலம் கழிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும் .இதனை ஆயுர்வேத த்தில் கழிச்சல் நோய் என்பார்கள். இதனை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். எனவே, டீ, காபியை குறைத்துக்கொண்டால் மலம் வேகமாக வெளியேறும் வேகத்தைக் குறைக்கலாம். உடலிலுள்ள நீரும் இதன் காரணமாக வேகமாக வெளியேறும் என்பதால் கவனம் தேவை. நன்றி: பிபிசி